மைலேஜில் டூவீலர்களையே மண்டியிட வைக்கும் மாருதி கார்... விலையை கேட்டதும் ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்...
இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) உள்ளது. இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்கள் கடந்து விட்டாலும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர், இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவே உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரமே இதற்கு சாட்சி. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 16,368 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் ரக கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி வேகன் ஆர் பெற்றுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 17,305 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 16,368 ஆக குறைந்துள்ளது. இது 5 சதவீத வீழ்ச்சி ஆகும். சிறிய அளவிலான வீழ்ச்சி என்றாலும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமானது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
வரும் மாதங்களில், மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்த சிறிய சரிவில் இருந்து மீண்டு வரும் என உறுதியாக நம்பலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 5.54 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.38 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர், மிகச்சிறந்த காராக கருதப்படுகிறது. எனவேதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வாங்க வாடிக்கையாளர்கள் இன்னமும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை, வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்குவதற்கு சிறப்பான மைலேஜ் (Mileage) ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் இன்ஜின் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல்/ஏஜிஎஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட இந்த காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள் அதிக மைலேஜ் வழங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடல்களிலும் 1.0 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இருப்பினும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர், மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








