34 கிமீ மைலேஜ் தர்ற காரை இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறாங்களா! சூட்டோ சூட்டா ஷோரூமுக்கு கௌம்பீர வேண்டியதுதான்!

இந்தியாவில் என்னதான் தொடர்ச்சியாக எஸ்யூவி (SUV) ரக கார்கள் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் கூட, ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுக்கான வரவேற்பு இன்னமும் குறையவில்லை. இதற்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஒரு நல்ல உதாரணம். இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 16,450 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15,578 ஆக மட்டுமே இருந்தது. இது 6 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Suzuki Wagon R

இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர், 4வது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 5.55 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர், மிகச்சிறந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமானதாக உள்ளது.

Maruti Suzuki Wagon R Side View

அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த காரின் 1.0 லிட்டர் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இதுதவிர இந்த காரில் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. அவையும் கூட சிறப்பான மைலேஜ் வழங்க கூடியவைதான்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை எல்லாம், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. இது மிடில்-க்ளாஸ் மக்களுக்கு ஏற்ற ஹேட்ச்பேக் ரக கார் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் தொடர்ச்சியான அப்டேட்கள், சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் வசதிகள் உள்ளிட்ட காரணங்களால், கால் நூற்றாண்டை கடந்தும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் இன்றளவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 22:32 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report august 2024 6 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+