34 கிமீ மைலேஜை வாரி வழங்க கூடிய கார் இவ்ளோ கம்மியான ரேட்ல கிடைக்குதா! இனிமேல் பைக்குலாம் வித்த மாதிரிதான்!

இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்), மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாடா பன்ச் (Tata Punch) முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தை மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) தன்வசப்படுத்தியுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக இருந்து வரக்கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக கார் (Hatchback Car) ஆகும். கடந்த 1999ம் ஆண்டில் இருந்து, மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதெல்லாம் ஒரு சில கார்கள் அறிமுகம் செய்யப்படுவதும் தெரிவதில்லை. வரவேற்பு இல்லாத காரணத்தால், விற்பனை நிறுத்தப்படுவதும் தெரிவதில்லை. ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர், சுமார் 25 வருடங்கள் கடந்த பிறகும் கூட, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டுள்ளது.

Maruti Suzuki Wagon R

தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) அதை உறுதி செய்கிறது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 99,668 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 1,09,278 ஆக இருந்தது.

இது 9 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் 2வது இடத்தை பிடித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் தற்போதைய நிலையில் வெறும் 5.55 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது.

Maruti Suzuki Wagon R Side View

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 7.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் இன்ஜின்கள் ஆகும்.

இதுதவிர சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. அது 1.0 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் பெட்ரோல் இன்ஜின்களும் கூட, நல்ல மைலேஜ் வழங்க கூடியவையாகதான் இருக்கின்றன.

வசதிகளை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 4 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் ஆகியவை எல்லாம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது விற்பனையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் கூட, அது சிறியதுதான். எனவே வரும் மாதங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என நாங்கள் கருதுகிறோம். டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 4, 2024, 23:52 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report h1 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+