34 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரோட விலை இவ்ளோதானா! இதை யாருமே கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம், 13,790 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 17,481 ஆக இருந்தது.

இது 21 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்கிறது. அத்துடன் நல்ல மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. மேலும் பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இந்த கார் விற்பனையில் ஏன் வீழ்ச்சியை சந்தித்துள்ளது? என்பது உறுதியாக தெரியவில்லை.

Maruti Suzuki Wagon R

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 5.54 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.38 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும்.

Maruti Suzuki Wagon R Side View

இந்த 2 இன்ஜின்களுடனும், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. மறுபக்கம் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில், 1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இருப்பதிலேயே இந்த இன்ஜின்தான் அதிக மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜ் வழங்கும் அதே நேரத்தில், அதிநவீன வசதிகளுக்கு குறைவில்லாத காராகவும் மாருதி சுஸுகி வேகன் ஆர் திகழ்கிறது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் வசதிகளை பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை இந்த அளவிற்கு சரிவடைந்திருப்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. எனினும் வரும் மாதங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என நம்பலாம். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 19:06 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report june 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+