அதிக மைலேஜ் குடுக்கும் விலை குறைவான காரைலாம் வாங்க கூடாதுனு மக்கள் முடிவு பண்ணீட்டாங்களா! அடியோட சரிஞ்சிருச்சு

இந்திய சந்தையில் ஒரு சில ஹேட்ச்பேக் ரக கார்கள் (Hatchback Cars) மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகின்றன. அப்படி 2 தசாப்தங்களுக்கும் மேலாக விற்பனையில் இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றுதான் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கடந்த 1999ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர், தற்போது வரை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலம் ஓடி விட்டது.

ஆனால் இன்னமும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர், வாடிக்கையாளர்களை கவர கூடிய கார்களில் ஒன்றாகவே திகழ்கிறது. ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏனோ மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு சரியாக அமையவில்லை. ஆம், மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Maruti Suzuki Wagon R

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 13,922 வேகன் ஆர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், 22,080 ஆக இருந்தது. இது 37 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்த சரிவில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.

Maruti Suzuki Wagon R Rear Design

தற்போதைய நிலையில் 5.54 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் கிடைக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், 1.0 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில் இருப்பதிலேயே அதிகபட்சமாக மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 33.48 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான மைலேஜ் வழங்கும் அதே நேரத்தில், பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் கொண்டுள்ளது. இதில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் 4 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி வேகன் ஆர் போட்டியிட்டு வருகிறது. இந்த கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி வேகன் ஆர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 23:53 [IST]
English summary
Maruti suzuki wagon r sales report october 2024 37 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+