34 கிமீ மைலேஜ் குடுக்கற காரை தர மட்ட ரேட்ல விக்கறாங்களா! தீபாவளிக்கு நிறைய பேர் வீட்ல சொந்த கார் நிக்க போகுது!
இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) இருந்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர், இன்று வரை தொடர்ந்து விற்பனையில் இருந்து கொண்டுள்ளது. ஆனால் பெயரளவிற்கு மட்டும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த 25 வருடங்களாக மாருதி சுஸுகி நிறுவனம் சீரான இடைவெளிகளில் வேகன் ஆர் காரை அப்டேட் செய்து கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம்.
ஆனால் நடப்பு 2024ம் ஆண்டின் செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆம், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் நடப்பு அக்டோபர் மாத பண்டிகை காலத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் மாருதி சுஸுகி வேகன் ஆர் சந்தித்திருப்பது, ஓரளவிற்கு சிறிய சரிவு மட்டுமே. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16,250 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,339 ஆக சரிவடைந்துள்ளது.
இது 18 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் அக்டோபர் மாத சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), வரும் நவம்பர் மாதம் வெளியாகும்போது, வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி வேகன் ஆர் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, அதிகம் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில், 3வது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை இந்திய வாடிக்கையாளர்கள் இத்தனை வருடங்களாக தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையில் வாங்கி கொண்டிருக்க அதன் குறைவான விலை (Price) மற்றும் அதிகமான மைலேஜ் (Mileage) ஆகிய 2 அம்சங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 5.54 லட்ச ரூபாய் மட்டுமே. இது ஆரம்ப நிலை LXI வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. ZXI Plus AGS-தான் இந்த காரின் டாப் வேரியண்ட்டாக உள்ளது.
இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் 1.0 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி வேகன் ஆர் நல்ல ஆப்ஷன்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுக்கு மாற்றாக ஒரு காரை தேடி கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
தீபாவளி (Diwali) பண்டிகையை முன்னிட்டு புது கார் வாங்க முடிவு செய்துள்ளவர்களும், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை பரிசீலனை செய்யலாம். நிறைய பேர் இதை செய்யக்கூடும் என்பதால், நவம்பர் மாதம் வெளியாக கூடிய அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டில், மாருதி சுஸுகி வேகன் ஆர் வளர்ச்சியை பதிவு செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








