இந்தியாவில் 25 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்.. இது டாடாவோ அல்லது ஹூண்டாயோட தயாரிப்போ இல்லைங்க!!
இந்தியாவில் ஓர் கார் மாடல் 25 ஆண்டுகளாக விற்பனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இவ்வளவு நீண்ட ஆண்டு காலத்திற்கு விற்பனையில் இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மக்களின் மனதைக் கவர்ந்திருந்தால் மட்டுமே ஓர் வாகனத்தால் இந்த அளவு நீண்ட காலம் சந்தையில் நீடித்து இருக்க முடியும். அந்த மாதிரியானதாக ஓர் வாகனம் இந்தியாவில் இருந்துக் கொண்டிருக்கின்றது. அது வேறு யாருடையதும் அல்ல நம்ம மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்பே அது ஆகும்.
வேகன்ஆர் (WagonR), இதுவே இந்தியாவில் 25 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அந்த கார் மாடல் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை இந்தியாவில் முதல் முறையாக 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து இப்போது வரை நாட்டில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன் விளைவாகவே அதனால் 25 ஆண்டுகளாக சந்தையில் விற்பனையில் நிலைத்துக் கொண்டிருக்க முடிந்திருக்கின்றது. சொல்லப்போனால் இந்தியர்களின் பிரியமான கார் மாடலாக வேகன்ஆர் மாடல் உள்ளது. இதற்கு ஓர் செல்லப் பெயரும் உண்டு. 'டால் பாய்' அதுவாகும். உயரமான உருவ அமைப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பெயரை அதற்கு இந்திய கார் காதலர்கள் வைத்திருக்கின்றனர்.
இதன் ஆரம்ப விலையும் மிக மிக குறைவாகும். ரூ. 5.54 லட்சம் என்கிற பட்ஜெட் விலையிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இந்த கார் மாடலில் பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகின்றன.

இரண்டிலும் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணங்களினாலேயே இந்தியர்களின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி வேகன்ஆர் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக பெரிய கேபினைக் கொண்ட காராக வேகன்ஆர் காட்சியளிக்கின்றது.
இதுதவிர, பயணிகளுக்கு அதிக ஹெட்ரூமை வழங்குவதற்கு ஏதுவாக இதன் உயரமான தோற்றம் உள்ளது. ஆகையால், உயரமான நபர்களாலும் சௌகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும். 6 அடி உயரமுள்ளவர்களாலும் இடையூறு இல்லாமல் இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், லெக்ரூமும் இதில் மிக தாராளமாக கிடைக்கும்.
பின்னிருக்கையில் மூன்று பேர் அமர்ந்து பயணித்தாலும் அசௌகரியமாகவே இருக்காது. இதனால்தான் பலரும் இப்போதும் அதிக ஆர்வத்துடன் வேகன்ஆர் காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த காரின் பூட் ஸ்பேஸும் மிக தாராளமாக இருக்கும். 341 லிட்டர் அளவிலேயே அதன் பூட் ஸ்பேஸ் உள்ளது.
இதுமட்டுமில்லைங்க இந்த கார் மாடல் மைலேஜ் தருவதிலும் கை தேர்ந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இதன் பெட்ரோல் - மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட தேர்வு லிட்டர் ஒன்றிற்கே அதிகபட்சமாக 24.35 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். இதேபோல், இதன் பெட்ரோலே - ஏஜிஎஸ் கியர்பாக்ஸைக் கொண்ட தேர்வு லிட்டருக்கு 25.19 கிமீ வரையில் மைலேஜை தரும்.
சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதிலேயே அதிகபட்சமாக கிலோ ஒன்றிற்கு 33.47 கிமீ வரையிலும் மைலேஜை வழங்கும். இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பான டிராவலுக்காக இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன் பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் உறுதியான உலோக பாடியைக் கொண்டு தயார் செய்திருக்கின்றது. இதேபோல், அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றையும் வேகன்ஆர் தன்னுள் தாங்கியிருக்கும்.
இந்த காருக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு மாருதி சுஸுகி நிறுவனம் இதன் புதிய வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆர் கார் மாடலைக் காட்டிலும் மிக மிக அதிக மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வேகன்ஆர் கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மிக முக்கியமாக அதன் உயரமான தோற்றம், அதிக இட வசதி மற்றும் அதிக மைலேஜ் ஆகியவையே உள்ளன. இதுதவிர, வாடிக்கையாளர்களின் கவனத்தை தொடர்ச்சியாக தன் பக்கமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அப்டேட்டுகளை வழங்கி இந்த காரை சந்தையில் நிலைத்திருக்கிச் செய்துக் கொண்டிருக்கின்றது, மாருதி.


Click it and Unblock the Notifications








