இனி 2 வருஷம் கிடையாது மாருதி கார்களுக்கு 3 வருஷம் வாரண்டி கிடைக்கும்! எதெல்லாம் கவர் ஆகும் தெரியுமா?

இன்று முதல் டெலிவரி எடுக்கப்படும் மாருதி வாகனங்களுக்கு கூடுதல் வாரண்டி வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாரன்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை வாரண்டி வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வாரண்டியில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் கவராகும்? எதெல்லாம் கவராகாது மற்றும் கூடுதலான வாரண்டியை பெற என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை தயாரித்து விற்பனை அனுப்பும் போது வாரண்டி வழங்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு வாகனங்களும் வாரண்டியுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இப்படியாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் வாரண்டியை பொறுத்து அந்த நிறுவனத்தின் மதிப்பு என்பது முடிவு செய்யப்படுகிறது. வாகனத்தின் தரமும் வாரண்டியை பொறுத்தே இருக்கிறது.

maruti suzuki warranty

இந்நிலையில் மாருதி நிறுவனம் நேற்று வரை நாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ வரை வாரண்டியை ஸ்டாண்டர்டாக வழங்கி வந்தது. தற்போது இந்த வாரண்ட்டி காலத்தை அதிகரித்து மாருதி நிறுவனம் இன்று அதாவது ஜூலை 9ம் தேதி முதல் டெலிவரி எடுக்கப்படும். அனைத்து வாகனங்களுக்கும் 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை வாரண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வாரண்டியில் இன்ஜின், கியர்பாக்ஸ், மெக்கானிக்கல் உபகரணங்கள், எலெக்ட்ரிகல் சிஸ்டம், ஏசி சிஸ்டம், உள்ளிட்டவை உள்ளடங்கும். இந்த இடத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இந்த வாரண்டியின் மூலம் அதை சரி செய்து கொள்ள முடியும். இதுபோக தனியாக வாங்கும் அக்சஸரிஸ்களுக்கு இந்த வாரண்டி கிடையாது.

maruti suzuki warranty

இதுபோக மாருதி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ்களையும் வழங்குகின்றன. இந்த பேக்கேஜ்களை வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். அதன்படி பிளாட்டினம் பேக்கேஜை பொறுத்த வரை நான்கு ஆண்டுகள் அல்லது 1,20,000 கிலோமீட்டர் வரையில் வாரண்டி வழங்குகிறது.

அடுத்ததாக ராயல் பிளாட்டினம் பேக்கேஜ் பொருத்தவரை 5 ஆண்டுகள் அல்லது ஒரு 1.40 லட்சம் கிலோமீட்டர் வரை வழங்குகிறது. இருப்பதிலேயே அதிகபட்சமாக சாலிட்டர் என்ற பேக்கேஜ் மூலம் ஆறு ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டியை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த பேக்கேஜ்களை வாங்குவதன் மூலம் வாரண்டி காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும்.

maruti suzuki warranty

இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ்களில் மொத்தம் 11 அதிக விலை மதிப்பு கொண்ட பாகங்கள் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் சில முக்கியமான பாகங்கள் எல்லாம் பிரச்சினை ஏற்பட்டாலும் நுகர்வோருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லாமல் பொருளாதார இழப்பு இல்லாமல் இதை சரி செய்து கொள்ள முடியும். இதற்கான ரிப்பேர் செலவும் வாடிக்கையாளர்களுக்கு குறைகிறது.

வாரண்டி காலத்தை அதிகம் செய்து கொடுத்துள்ளது மூலம் மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வாரண்டியை அந்நிறுவனம் அங்கீகரித்த சர்வீஸ் சென்டர் அனைத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இனி ஒரே மாதிரியான வாரண்டி தான் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட வாரண்டி மூலம் மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தையும், அதே நேரம் அதிக விலை மதிப்பு கொண்ட உதிரி பாகங்களுக்கு ஒரு பாதுகாப்பையும் வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித டென்ஷனும் தேவையில்லை. வாடிக்கையாளர்களின் திருப்தியை பெறுவதற்காக இந்த பேக்கேஜ்களை எல்லாம் நிரூபணம் அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தகுந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ்களை தேர்வு செய்து கொள்ளும் வகையில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கி உள்ளது. மேலும் இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டியில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் மாடிஃபிகேஷன் செய்து கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் மாருதி நிறுவனம் நம்பகமான வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற முயற்சி செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 17:06 [IST]
English summary
Maruti suzuki warranty extends programmes vehicles details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X