காட்டு தீ போல் பரவும் தகவல்களால் அதிர்ச்சி! இந்த காரின் விற்பனையை நிறுத்த போகுதா மாருதி சுஸுகி? உண்மை இதுதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பிரீமியமான கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக சியாஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City), ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய கார்கள் உடன், மாருதி சுஸுகி சியாஸ் போட்டியிட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரின் விற்பனையை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல்களை மாருதி சுஸுகி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சியாஸ் காருடையை விற்பனையை நிறுத்தும் எண்ணம் இல்லை என மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

Maruti Suzuki Ciaz

இந்திய மக்கள் இன்னமும் சியாஸ் காரை விரும்பி வருவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே சியாஸ் காருக்கு இன்னமும் பிரத்யேகமான வாடிக்கையாளர்கள் கூட்டம் இருப்பதாகவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம் மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை நிறுத்தப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் சமீப காலமாக எஸ்யூவி (SUV) ரக கார்கள் மிகப்பெரிய எழுச்சியை பெற்று வருகின்றன. எஸ்யூவி ரக கார்களின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ள நிலையில், செடான் ரக கார்களின் விற்பனை 'டல்' அடிக்கிறது. ஆனால் செடான் ரக கார்களுக்கு இன்னமும் மார்க்கெட் இருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

Maruti Ciaz

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி சியாஸ் கார், கடந்த 2014ம் ஆண்டுதான் இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் விற்பனைக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், மாருதி சுஸுகி சியாஸ் கார் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்கள் எதையும் பெறவில்லை. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதான் மாருதி சுஸுகி சியாஸ் கார் கடைசியாக பெற்ற முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் ஆகும்.

தற்போது 2024ம் ஆண்டின் மத்திய பகுதிக்கே நாம் வந்து விட்டோம். இடைப்பட்ட இந்த 6 ஆண்டுகளில், மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் எதையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. எனவே போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி சியாஸ் பழைய கார் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

போட்டி அதிகரித்து கொண்டுள்ள நிலையில், இது மாருதி சுஸுகி சியாஸ் காரின் 'மைனஸ் பாயிண்ட்' ஆக உள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரை பல்வேறு புதிய வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களுடன் அப்டேட் செய்து களமிறக்கினால், விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது எங்கள் கருத்து.

மாருதி சுஸுகி நிறுவனம் இதை செய்யுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் மற்றொரு செடான் ரக காரான டிசையர் (Maruti Suzuki Dzire) காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 13:54 [IST]
English summary
Maruti suzuki will not discontinue ciaz in india all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+