பக்கத்து வீட்டுக்காரங்களையும் ஏத்தீட்டு போலாம்! 27 கிமீ மைலேஜ் தரும் பிரீமியமான மாருதி காரின் விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 4,505 எக்ஸ்எல்6 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 1,754 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் விற்பனையில் 157 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலை 11.61 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.77 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது 6 சீட்டர் கார் ஆகும். 6 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால், நிறைய பேர் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை விரும்பி வாங்குகின்றனர்.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

இதன் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி கூறியுள்ளது. மறுபக்கம் இதன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று மாருதி சுஸுகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படவில்லை. மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. எனினும் இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜை வழங்கும்.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை வாடிக்கையாளர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும் எனவும், அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது திகழ்கிறது.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரை விட பிரீமியமானது என்பது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








