27 கிமீ மைலேஜ்! இத்தன பேர் போலாமா! இந்த மாதிரி ஒரு காரை இதுக்கு மேல கம்மி விலையில் யாராலயும் விக்க முடியாது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் எம்பிவி ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனையாகி கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், 6 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அதிக நபர்களை உள்ளடக்கிய சற்றே பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக திகழும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 2,740 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4,184 ஆக இருந்தது. இது 35 சதவீத வீழ்ச்சியாகும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, ஒரு பிரீமியம் கார் ஆகும். எனவே அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம், இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
இவை எல்லாம் தவிர, 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் போன்ற வசதிகளும் கூட, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு (Safety) அம்சங்களை பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 4 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய வசதிகளும், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் 1.5 லிட்டர் பெட்ரோல்/5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.97 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், 1.5 லிட்டர் பெட்ரோல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை விட அதிக மைலேஜ் வேண்டும் என விரும்பினால், இந்த காரின், 1.5 லிட்டர் சிஎன்ஜி/5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்டை தேர்வு செய்யலாம். ஏனெனில் இந்த 'காம்பினேஷன்' ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலை 11.61 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.61 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகிய கார்களுக்கு, மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 திகழ்ந்து வருகிறது. அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கும் கூட, இது மாற்று ஆப்ஷன்தான்.


Click it and Unblock the Notifications








