26 கிமீ மைலேஜ் தர்ற இந்த கார்ல நிறைய பேர் தாராளமா போலாம்! விலையும் ரொம்ப அதிகம்லா இல்ல! எவ்ளோனு தெரியுமா?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலமாக, எக்ஸ்எல்6 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 2,923 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 4,320 ஆக இருந்தது. இது 32 சதவீத வீழ்ச்சி ஆகும். இது பெரிய அளவிலான சரிவுதான் என்றாலும் கூட, வரும் மாதங்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலை 11.61 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.61 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் (Petrol Engine) இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் பெட்ரோல் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG Engine) இன்ஜின் வேரியண்ட்டும் விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருப்பதும், இதே 1.5 லிட்டர் இன்ஜின்தான்.
ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, பவர் அவுட்புட் 88 பிஎஸ் மற்றும் 121.5 என்எம் ஆக மட்டுமே இருக்கும். அதேபோல் சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் இன்ஜினை விட, சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.97 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்கும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.27 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்டோ, ஒரு கிலோவிற்கு 26.32 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பிரீமியமான கார் ஆகும். எனவே அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை.
இதில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, முன்பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, 6 சீட்டர் கார் ஆகும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








