6 பேர் சொகுசா போலாம்... 27 கிமீ மைலேஜ் தரும்... இப்படி ஒரு காரை வாங்கவா ஆள் இல்லாம போச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). இது பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா (Arena) ஷோரூம்களுக்கு பதிலாக நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 3,241 எக்ஸ்எல்6 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3,577 ஆக இருந்தது. இது 9 சதவீத வீழ்ச்சி ஆகும். பிரபலமான காராக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 விற்பனை ஏன் சரிவை சந்தித்துள்ளது? என்பதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

Maruti Suzuki XL6

எனினும் வரும் மாதங்களில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலை 11.61 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.77 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் மேனுவல் மாடல்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.97 கிமீ ஆகும்.

Maruti Suzuki XL6 Interior Design

அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் மாடல்களின் மைலேஜ் 20.27 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையிலான ஆப்ஷனையும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பெற்றுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இதன் மைலேஜ் 26.32 கிமீ என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பிரீமியம் கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இதில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது ஆகும்.

இதுதவிர முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, 360 டிகிரி கேமரா மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி காரில் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரானது, 6 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும் எனவும், கூடவே நல்ல மைலேஜ் கிடைக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 23:45 [IST]
English summary
Maruti suzuki xl6 sales report may 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+