புது ஸ்விஃப்ட் காரை ரூ1.19 லட்சம் குறைந்த விலையில் வாங்கலாமா? இப்படி ஆப்ஷன் இருக்குறதே பாதி பேருக்கு தெரியாது!
மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த மே மாதம் தான் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து மார்க்கெட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகமான முதல் மாதமே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் காராக மாறியது. ஏகப்பட்ட பேர் இந்த காரை புக் செய்து வாங்கி வருகிறார்கள். இந்த காரை வாங்க பலர் காத்திருந்த நிலையில், தற்போது அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கார் தற்போது ராணுவ கேண்டீனிலிலும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ கேண்டீனில் இந்த காரின் விலை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்காக நாடு முழுவதும் ராணுவ கேண்டீன் செயல்பட்டு வருகிறது. அங்கு வெளியில் கிடைக்கும் பொருட்கள் ஜிஎஸ்டி வரி இல்லாமல் குறைந்த விலையில் ராணுவ வீரர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கேண்டீனில் நாம் வழக்கமாக வீட்டு உபயோக பொருட்களை மட்டுமல்லாமல் கார்,பைக் போன்ற வாகனங்களையும் வாங்க முடியும்.

தற்போது இந்த ராணுவ கேண்டீனில் கடந்த மாதம் அப்டேட்டாகி வெளியான மாருதி ஸ்விஃப்ட் காரும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளி ஷோரூமில் கிடைக்கும் அனைத்து வேரியண்ட்களும் ராணுவ கேண்டீனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய இரண்டு விதமான கியர் ஆப்ஷன் கொண்ட கார்களும் விற்பனையாகிறது. இதன் விலை விபரங்களை படிப்படியாக காண்போம்.
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட ஆப்ஷன் இருக்கிறது. இதில் எல்எக்ஸ்ஐ வேரியண்டை பொறுத்தவரை 6.49 லட்சம் என்ற விலையிலும் ராணுவ கேண்டீனில் ரூபாய் 5.72 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 76,735 ஆகும்.. இதுதான் இந்த காரின் பேஸ் வேரியண்டாக விற்பனையாகி வருகிறது.

அடுத்ததாக விஎக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்தவரை எக்ஸ்ஷோரூமில் ரூ7.29 லட்சம் என்ற விலையிலும் ராணுவ கேண்டீனில் ரூ6.37 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ 92,364 ஆகும். அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்தவரை ரூ8.29 லட்சம் என்ற விலையிலும் ராணுவ கேண்டீனில் ரூ7.26 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ 1.03 லட்சம் ஆகும்.
அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூ8.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் இதே கார் ரூ7.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ 1.10 லட்சம் ஆகும். அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடி வேரியன்டை பொறுத்தவரை ரூ9.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் ரூ8.08 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் 1.06 லட்சம் ஆகும்.

அடுத்ததாக 1.2லி பெட்ரோல் ஏஎம்டி ஆப்ஷன் கொண்ட காரை பொருத்தவரை விஎஸ்ஐ வேரியண்ட் தான் பேஸ் வேரியண்டாக இருக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ7.79 லட்சமாக விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் இந்த கார் 6.78 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 1 லட்சம் ஆகும்.
அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்தவரை எக்ஸ்ரூமில் ரூ 8.79 லட்சம் என்ற விலையிலும் ராணுவ கேண்டீனில் ரூ7.67 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.11 லட்சம் ஆகும். இசட்எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்டை பொருத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ9.49 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூ8.29 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.19 லட்சம் ஆகும்.
இறுதியாக டாப் வேரியன்டை பொறுத்தவரை இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடி வேரியன்ட் விற்பனையாகி வருகிறது. இது எக்ஸ்ஷோரூமில் 9.64 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூ8.47 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.16 லட்சம் ஆகும். வெளி மார்க்கெட்டில் 28% அளவிற்கு வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ராணுவ கேண்டீனில் இது 14 சதவீதம் தான் விதிக்கப்படும் என்பதால் இந்த விலை வித்தியாசம் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யப்படும் கார்கள் ராணுவ வீரர்கள் மட்டுமே வாங்க முடியும். அதுவும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தகுதியுடன் கூடிய நபர்களுக்கு மட்டுமே இந்த கார்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார்களை வாங்கி அவர்கள் வெளிமார்க்கெட்டில் விற்கவும் தடை இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









