வீட்டுக்கு வீடு இந்த காரை புக் பண்ணிட்டாங்க போல! ஒரு மாசத்துலேயே இவ்வளவு பேர் புக் பண்ணிட்டாங்களா?

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரின் நான்காம் தலைமுறை அப்டேட் கடந்த மே மாதம் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியது. அப்பொழுது முதல் இந்த காருக்கான புக்கிங் துவங்கி நடந்து வரும் நிலையில், ஒரே மாதத்தில் இந்த காரை ஏகப்பட்ட நபர்கள் புக் செய்து விட்டதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த மே மாதமே இந்த காரின் டெலிவரி துவங்கிவிட்ட நிலையில், மே மாத விற்பனையும் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து இந்த காருக்கு புக்கிங் வந்து கொண்டே இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை கடந்த மே மாதம் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. இதனால் இந்த காரின் அறிமுகத்திற்காக பலர் காத்திருந்தார்கள். இந்த கார் அறிமுகமானது முதல் இந்த காருக்கான புக்கிங்கும் துவங்கிவிட்டது.

maruti swift booking

இந்நிலையில் ஒரே மாதத்தில் இந்த காரை 40 ஆயிரம் பேர் புக் செய்துள்ளதாக தற்போது மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது காரின் டெலிவரியும் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்போது டீலர் ஷிப்களில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த காரின் டெலிவரையும் நடந்து வருகிறது.

கடந்த மே மாதம் ஒட்டு மொத்தம் 19,393 வாகனங்களை மாருதி நிறுவனம் மொத்தமாக டீலர் ஷிப் களுக்கு விற்பனை செய்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த மே மாதம் இந்நிறுவனத்திலேயே அதிகமாக விற்பனையாகும் காராக இந்த கார் தான் மாறியுள்ளது. ஏற்கனவே சிறப்பாக விற்பனையாகி வரும் டிசையர் மற்றும் வேக்ன் ஆர் ஆகிய கார்களை பின்னுக்குத் தள்ளி இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

maruti swift booking

மாருதி நிறுவனம் எதிர்பார்த்ததை விட இந்த 4ம் தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு அதிக அளவிலான புக்கிங் குவிந்து வருகிறது. இதுவரை இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகமாகவில்லை. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகமானால் இன்னும் புக்கிங் அதிகமாகும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் இதன் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு தற்போது வந்துள்ள புக்கிங்கில் 83 சதவீதம் மேனுவல் கியர் வேரியன்டிற்காக வந்துள்ளது. 17 சதவீதம் மட்டுமே ஏஎம்டி வேரியன்டிற்காக இந்த புக்கிங் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்ல இதுவரை வந்த புக்கிங்கில் 50 சதவீதம் வரை மீடியம் வேரியண்டான விஎக்ஸ்ஐ வேரியண்டிற்கு புக்கிங் வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

maruti swift booking

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 6.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதற்கிடையில் மாருதி நிறுவனம் அதன் ஏஎம்டி கார்களுக்கு ரூபாய் 5000 வரை விலை குறைப்பு செய்தது. அந்த விலை குறைப்பு இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை புதிதாக உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட் சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 80 பிஎச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முன்னர் இருந்த இன்ஜினை விட அதிக மைலேஜ் தரும் திறன் கொண்டதாக இருக்கிறது. தற்போது இந்த கார் 25.72 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

இந்த கார் மீது மக்கள் அதிக மோகம் கொள்வதற்கு இதன் மைலேஜ் மிக முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது. அதிக மைலேஜ் தரும் கார் என்றால் இந்த காரை வாங்கிய பின் அதற்கான எரிபொருள் செலவு குறையும் என்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள். மேலும் இந்த காரின் விலையும் அதிகமாக இல்லை என்பது கூடுதல் தகவல்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி ஸ்விஃப்ட் காருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த கார் சிறப்பான விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் அறிமுகமானது முதல் இன்று வரை மக்கள் மத்தியில் இந்த காரை வாங்குவதற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. பலர் இந்த காரை வாங்குவதை கனவாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 10:21 [IST]
English summary
Maruti swift booking over 40k bookings in one month
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X