காசு எல்லாம் மேட்டர் இல்ல ஸ்விஃப்ட் காரை வாங்கும் மக்கள் எந்த வேரியன்டை அதிகம் புக் பண்ணுறாங்க தெரியுமா?
மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து கடந்த மே மாதம் 9ம் தேதி இந்திய மார்க்கெட்டிற்காக அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதல் இந்த காரின் புக்கிங் துவங்கியது. அதன் பிறகு ஓரிரு வாரங்களில் இந்த காரின் டெலிவரியும் துவங்கிய நிலையில், தற்போது இந்த காரின் விற்பனை சூடு பிடித்து வருகிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதில் எந்தெந்த வேரியன்ட் கார்கள் அதிகமாக புக்கிங் செய்யப்படுகிறது என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதால் இந்நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையும் இருக்கிறது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தின் சிறந்த காராக ஸ்விஃப்ட் கார் இருக்கிறது.

இந்த காரை பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கும். இந்நிலையில் இதன் நான்காம் தலைமுறைகாரை கடந்த 9ம் தேதி மாருதி நிறுவனம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. ரூபாய் 6.49 லட்சம் முதல் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் வருகைக்காக காத்திருந்த பல வாடிக்கையாளர்கள் இந்த காரின் அறிமுகம் செய்யப்பட்டவுடன் அந்த காரை புக் செய்ய துவங்கி விட்டார்கள்.
தற்போது சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் இந்த காருக்காக குவிந்துள்ளது. சுமார் ஒரு மாதமாகும் நிலையில், இதுவரை மாருதி நிறுவனம் 19,393 கார்களை தனது டீலர் ஷிப்களுக்கு டெலிவரிக்காக அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பலரும் எதிர்பாராத வகையில் மாருதி நிறுவனத்தின் காருக்கு பெரிய அளவில் புக்கிங் வரவில்லை. ஆனால் மிட்-வேரியன்ட் காருக்கு தான் அதிக புக்கிங் குவிந்துள்ளது.

மாருதி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி மாருதி ஸ்விஃப்ட் காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஓ ஆகிய வேரியன்ட்களுக்கு இதுவரை வந்த புக்கிங்கில் 60 சதவீதமான புக்கிங் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்ததாக என்ட்ரி லெவல் வேரியண்டான எல்எச்ஐவி வேரியன்டை பொறுத்தவரை 11 சதவீத புக்கிங் வந்துள்ளது.
இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் என்ற டாப் வேரியன்ட்களை பொறுத்தவரை மொத்தம் 19% புக்கிங் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்ததாக மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதில் இதுவரை வந்த ஒட்டுமொத்த புக்கிங் 17 சதவீத புக்கிங் தான் ஏஎம்டி கியர் ஆப்ஷன் கொண்ட வாகனங்களுக்கான புக்கிங்கிற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஏஎம்டி ஆப்ஷன் என்பது விஎக்ஸ்ஐ வேரியன்ட் முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

பேஸ் வேரியண்ட் காரில் இந்த ஏஎம்டி ஆப்ஷன் என்பது இல்லை. இதில் விஎக்ஸ்ஐ ஏஎம்டி வேரியன்டை பொறுத்தவரை 10% புக்கிங் வந்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. விஎக்ஸ்ஐ ஏஎம்டி வேரியன்டிற்கு வரும் 10 சதவீதம் தான் ஏஎம்டி வேரியண்டிற்கு வந்துள்ளது. மத்த எல்லாம் மேனுவல் வேரியன்டிற்காக தான் வந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மேனுவல் கியர் ஆப்ஷனுக்கு தான் நல்ல வரவேற்பு இருப்பது தெரிகிறது.
மாருதி நிறுவனத்தின் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 எச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கியமான அம்சமே இதன் மைலேஜ் தான் இந்த கார் மேனுவல் கியரில் 24.8 கிலோமீட்டர் மைலேஜையும் ஏஎம்டி கியர் ஆப்ஷனில் 25.75 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாருதி ஸ்விப்ட் கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியே வந்தது முதல் இதுவரை சிஎன்ஜி வேரியட் என்பது அறிமுகம் செய்யப்படவில்லை. அறிமுகமானால் இன்னும் மைலேஜ் அதிகமாக கொடுக்கும் வகையில் அறிமுகமாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு சில வாரங்களில் இதன் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன. இதுவரை மாருதி நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான செய்திகள் குறித்து இந்த தகவலும் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி ஸ்விஃப்ட் காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வரும் நிலையில் அந்த காருக்கான புக்கிங் குறித்த தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதன் மிட் வேரியன்ட் 60 சதவீதத்திற்கும் அதிகமான புக்கிங் அமைந்துள்ளதால், மக்கள் பல மிட் வேரியன்டை தான் அதிகம் விரும்புகிறார்கள் என தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









