32 கிமீ மைலேஜ் தரும் புதிய ஸ்விஃப்ட் கார் வரப்போகுது! விலை எவ்வளவு தெரியுமா?
மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த கார் பெட்ரோல் இன்ஜின் மூலமே 25 கிலோமீட்டர் மைலேஜ் தரும் நிலையில், சிஎன்ஜி வேரியண்டில் இந்த கார் 32 கிலோமீட்டர் மைலேஜ் கூட தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரின் விலை என்ன இப்படியான அப்டேட் உடன் இந்த கார் வரப்போகிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் தான் தனது 4ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமான முதல் தற்போது வரை சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. மக்கள் பலர் இந்த அப்டேட்டுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், தற்போது இந்த அப்டேட் வெளியான பிறகு மக்கள் பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள்.

இந்த அப்டேட்டிற்கு பிறகு மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்தின் பல்வேறு கார்கள் விற்பனையாகி வரும் நிலையில் ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட் எப்பொழுது அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இன்று மக்கள் மத்தியில் அதிக மைலேஜ் தரும் கார் அதிகமாக விரும்பப்படுகிறது.
இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்றை மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி ஸ்விஃப்ட் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் ஸ்விஃப்ட் காரின் இன்ஜினை அப்டேட் செய்த பிறகு அதன் மைலேஜ் சிறப்பாக இருக்கிறது.

மாருதி நிறுவனம் தனது புதிய ஸ்விஃப்ட் காரில் இசட் சீரியஸ் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 82 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தான் புதிய இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீட் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வெர்ஷனில் இந்த கார் அறிமுகமாகும் போது இதே இன்ஜின் தான் பயன்படுத்தப்படும். ஆனால் பவர் மற்றும் டார்க் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மாருதி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை தற்போது மேனுவல் கியர் ஆப்ஷனில் 24.8 கிலோமீட்டர் மைலேஜையும், ஏஎம்டி கியர் ஆப்ஷனல் 25.75 கிலோமீட்டர் மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதில் சிஎன்ஜி ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் இந்த கார் குறைந்தபட்சம் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30-31 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம். இதில் ஏஎம்டி வெர்ஷன் வருகிறதா என்ற தகவல் இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இதில் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி வேரியண்ட் கார் வரும் பட்சத்தில் நிச்சயம் இது 32கிலோமீட்டர் மைலேஜ் தரும் காராக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அறிமுகத்தின் போது தான் இது குறித்த விரிவான அப்டேட்கள் எல்லாம் தெரியவரும். இந்த காரின் விலையை பொருத்தவரை தற்போது விற்பனையாகி வரும் பெட்ரோல் காரின் விலையை விட ரூ95,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக மற்ற மாருதி கார்கள் எல்லாம் சிஎன்ஜி வேரியண்டின் விலையைப் பொறுத்தவரை அதன் பெட்ரோல் வேரியண்ட் விலையை விட சுமார் 95,000 கூடுதல் விலையில் தான் அறிமுகமாகி விற்பனையாகி வருகிறது. அதே பார்முலா தான் இந்த ஸ்விஃப்ட் காருக்கும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கார விற்பனைக்கு அறிமுகமான பிறகு விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி நிறுவனம் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்திய நிலையில் இதுவரை 65,513 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார்களை அதிகமாக விற்பனையாகும் நிலையில் சிஎன்ஜி காரர்கள் அறிமுகமான பிறகு இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அதிக மைலேஜ் விரும்பும் மக்களுக்கு இந்த கார் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்விஃப்ட் காருக்கு என மிகப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்திய மக்கள் பலர் ஸ்விஃப்ட் காரை விரும்பி வாங்கி வரும் நிலையில் காத்திருக்கிறார்கள். நிச்சயம் இது மார்க்கெட்டுக்கு வந்தால் நல்ல விற்பனையையும் வரவேற்பையும் பெரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









