30 கி.மீ மைலேஜ் தரும் கார் இந்த மாசமே விற்பனைக்கு வருதா? வெளியான புதிய தகவல்!

மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்த ஏப்ரல் மாதம் வெளியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சுமார் 30 கிலோமீட்டர் அளவிற்கு மைலேஜ் தரும் ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியன்ட் கொண்ட இந்த கார் இந்த மாதம் விற்பனைக்கு வர உள்ளதாக பேச்சுகள் அடிப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் அறிமுகமானது முதல் இன்று வரை மக்கள் மத்தியில் இந்த காரை வாங்க மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த காரை ஃபேஸ்ஃலிப்ட் செய்து வெளியிட மாருதி நிறுவனம் முடிவு செய்தது. அது மட்டுமல்லாமல் இதில் புதிதாக ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியன்டையும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

Maruti Swift Facelift Launch

தற்போது ஹைபிரிட் வேரியன்ட்கள் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கார் ஹைபிரிட் வேரியன்ட்டுடன் வெளியானால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைபிரிட் வேரியன்ட் கார்கள் பெட்ரோல் வேரியன்டை விட அதிக மைலேஜ் தரும் கார்களாக உருவாக்கப்படுகின்றன.

அதன்படி ஸ்விஃப்ட் காரின் ஹைபிரிட் வேரியன்ட் விற்பனைக்கு வரும்போது லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்டு அங்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் இந்தியாவிற்கும் இந்த கார் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Swift Facelift Launch

மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை போலவே தனது டிசையர் காரையும் அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டு வரும் நிலையில் இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள மாடலில் ஹெட்லைட், டெயில்லைட் காரின் முன்பக்கம் உள்ள கிரில் மற்றும் பம்பர்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் வெளிப்புற தோற்றம் மட்டுமல்லாமல் காரில் உள்ள அம்சங்களும் அப்டேட் செய்யப்பட உள்ளன. அதன்படி புதிய காரில் புதிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்பிலே உள்ள அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் தற்போது உள்ள காரில் இல்லை சிஸ்டம் தற்போது உள்ள கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Maruti Swift Facelift Launch

இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரல் இசட் சீரியஸ் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 82 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையாகி வரும் காரில் 1.2லிட்டர் கே சிரீஸ் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே பொருத்தப்படுகிறது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் உடன் விற்பனைக்கு வரும் காரில் ஸ்டிராங் ஹைபிரிட் வேரியன்ட் கொண்ட ஒரு வருஷம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் அதிக மைலேஜ் தரும் காராக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Maruti Swift Facelift Launch

இந்த காரை மக்கள் எதிர்பார்த்து பலர் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் இந்த கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் அதிகமான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனமும் இதை நோக்கி தான் இந்த காரை விரைவாக அறிமுகப்படுத்த ஏற்பாடுகளை எல்லாம் செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நமக்கு கிடைத்த தகவலின் படி 2024-25ஆம் தேதி ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்ய மாருதி நிறுவனம் இந்த ஸ்விப்ட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை மிக முக்கியமான அறிமுகமாக செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் துவக்கத்திலேயே இந்த கார் அறிமுகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 7:00 [IST]
English summary
Upcoming car launches april 2024 mahindra xuv300 tata altroz racer
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X