திடீரென விலை உயர்வை அறிவித்த மாருதி! ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா காரை வாங்க நினைத்தவர்களுக்கு ஆப்பு!

மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் விட்டாரா கார்களின் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இன்று முதல் அந்த காரை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். ஏற்கனவே உள்ள விலையை விட தற்போது எவ்வளவு விலை உயர்ந்துள்ளது. எந்தெந்த வேரியன்ட்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தான் இந்தியாவில் மக்கள் மனதை அதிகம் ஈர்த்த கார்களை தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

maruti swift grand vitara price hike

இந்நிலையில் மாருதி நிறுவனம் இன்று முதல் தனது ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் இந்த இரண்டு கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கார்களின் தயாரிப்பு செலவு அதிகமாகவதால் இந்த விலை உயர்வை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி மாருதி கிராண்ட் விட்டாரா காரின் பேஸ் வேரியண்டான சிக்மா வேரியண்டின் விலையை ரூபாய் 19,000 வரை அதிகரித்துள்ளது. மறுபுறம் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு ரூபாய் 25,000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாருதி கிராண்டு விட்டாரா காரை பொறுத்தவரை பேஸ் வேரியன்டான சிக்மா வேரியண்ட் மட்டுமே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

maruti swift grand vitara price hike

மற்ற அனைத்து வேரியன்ட்களும் ஏற்கனவே விற்பனையாகி வரும் அதே விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த கார் தற்போது ரூ10.95 லட்சம் முதல் ரூபாய் ரூ19.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மாருதி ஸ்விஃப்ட் காரை பொறுத்தவரை பொதுவாக ₹25,000 உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த வேரியன்ட்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மாருதி ஸ்விஃப்ட் காரை பொறுத்தவரை அந்நிறுவனம் விரைவில் பேஸ்லிப்ட் செய்து புதிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்பதால் இந்த காரில் பெரிய அளவுக்கு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. புதிய ஃபேஸ்லிப்ட் கார் வரும்போது புதிய விலை அறிவிக்கப்படும் என்பதால் இந்த விலை உயர்வில் விரிவான தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

maruti swift grand vitara price hike

புதிய மாருதி பேஸ்லிஃப்ட் ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் கொண்ட காராக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இதில் ஹைபிரிட் ஆப்ஷன் கொண்டுவரப்பட்டு இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் காராக இந்த கார் விற்பனைக்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த கார் மீது மக்கள் எதிர்பார்ப்பு ஏராளமாக இருக்கிறது.

மாருதி நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் 21,35,323 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் 17,93,064 கார்கள் இந்தியாவில் மட்டும் விற்பனையாகியுள்ளன. மற்றும் 2,83,607 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன. பாக்கி உள்ள வாகனங்கள் எல்லாம் மாருதி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் ஆகும்.

maruti swift grand vitara price hike

மாருதி நிறுவனம் திடீரென இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிதாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பலர் திடீர் இந்த விலை உயர்வால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இருந்தாலும் மாருதி நிறுவனம் இந்த நிதியாண்டில் அதிகப்படியிலான வருமானத்தை ஈட்டுவதற்காக இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் மாருதி நிறுவனம் விலை உயர்வை அறிவித்திருந்தாலும், கிராண்ட் வீட்டாரா காரில் ஒரே ஒரு வேரியன்டிற்கு மட்டுமே விளைவு அறிவிக்கப்பட்டுள்ளது, ஸ்விஃப்ட் கார் விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளதால் அந்த காரின் விற்பனை பெரிய அளவிற்கு தற்போது இருக்காது என்பதால் அதன் விலை உயர்வு அறிவிக்கப்பட்டாலும் அது பலரை பாதிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2024, 18:50 [IST]
English summary
Maruti swift grand vitara price hike april 10
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X