புது ஸ்விஃப்ட் வாங்கப்போறவங்களுக்கு அடிக்கப்போகுது ராஜயோகம்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து 2024 மாருதி ஸ்விஃப்ட் காராக இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமாகி உள்ள நிலையில் இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது என்னென்ன மாற்றங்கள் இடம் பெறும் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப்படுகிறோம்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்கும் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது இந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மக்கள் மனதை ஈர்த்த காராக இருக்கிறது. இதனால் எப்பொழுதும் இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கும் காராக உள்ளது. இந்த காரை தற்போது மாருதி நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டு வருகிறது.

அதன்படி இன்னும் ஓரிரு மாதங்களில் மாருதி நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமாகிவிட்டது. சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான இந்த கார் அப்படியே இந்தியாவில் அறிமுகமாகும் என கருத முடியாது. இந்தியாவிற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.
ஏற்கனவே இந்தியாவுக்கு வரப்போகும் மாருதி ஸ்விஃப்ட் கார் தற்போது ஆங்காங்கே பொதுசாலைகளில் சோதனை செய்யப்படுவது, கேமரா கண்களுக்கு சிக்கி சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த கார் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் தற்போது விற்பனையாகும் காரில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளன. மேலும் புதிய தொழில்நுட்பங்களும் இந்த காரில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ள இந்த கார் 1.2லிட்டர் இசட் சீரியஸ் 3சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. மேலும் இதில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்ட தொழில்நுட்பமும் இருக்கிறது. இது 82பிஎஸ் பவரையும் 112என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக இருக்கிறது. இந்தியாவிற்கு இந்த கால் வரும்போது இதே தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின் உடன் தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் மாருதி நிறுவனம் சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்துவதில் சிறப்பான நிறுவனமாக இருப்பதால் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் போது இதன் சிஎன்ஜி காரும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் புதிய கார் இந்தியாவில் அறிமுகமாகும் போது சில வேரியண்ட்களுக்கு மட்டும் புதிய இன்ஜின் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்த காரின் உட்புறத்தை பொறுத்தவரை 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இதுபோக இந்த காரின் உள்ள டேஷ்போர்டு மறுபடியும் அமைப்பு செய்யப்படும். புதிய ஹெச்விஏசி வென்ட்களுடனும் முற்றிலும் வித்தியாசமான கேபின் தீ மூடனும் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காரில் அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்பது சந்தேகம்தான். வெளிப்புற டிசைன் மாற்றத்தை பொறுத்த வரை முன்பக்கம் புதுமையான கிரில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக முன்பக்க பம்பர் அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்டுகள் 15 இன்ச் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலாய் வீல், பின்பக்க டோர் ஹேண்டில்கள் மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் பின்பக்க வடிவமைப்பு என்பது முற்றிலும் புதிதாக மறுபடியும் வைத்து செய்யப்படுகிறது. இந்த வடிவமைப்பு அனைத்தும் சர்வதேச மார்க்கெட்டில் உள்ள டிசைன் போலவே இந்திய மார்க்கெட்டில் வரும் காரும் டிசைன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களுக்காக ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்ட் சீட், ரியர் ஏசி வென்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், ஸ்டேரிங் வீல் கண்ட்ரோல், அப்டேட் செய்யப்பட்ட செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தற்போது ஸ்டிராங் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில், இந்த ஸ்விஃப்ட் காரின் ஸ்டிராங் ஹைபிரிட் கார் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளன. அப்படி இந்த கார் விற்பனைக்கு வந்தால் 30 கிலோமீட்டர் மைலேஜ் கொண்ட காராக இது விற்பனைக்கு வரும். இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications









