25.72 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் கார் நாளை அறிமுகமாகிறது! இந்த பத்தி இதெல்லாம் தெரியுமா?

பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் அப்டேட் செய்யப்பட்டு நாளை அறிமுகத்திற்கு தயாராகிறது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காரை அந்நிறுவனம் அப்டேட் செய்து வெளியிடப் போகிறது. இது மிகப் பெரிய அறிமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கார் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படியாக நாளை அறிமுகமாக உள்ள இந்த கார் குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை காணலாம்.

மாருதி நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச் பேக் காராக மாருதி ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் காராக இந்த கார் இருக்கிறது. இதனால் ஏகப்பட்ட மக்கள் இந்த காரை வாங்கி வருகிறார்கள். இந்திய சாலைகளில் அதிக அளவில் இந்த காரை காண முடியும்.

maruti swift launch

இந்நிலையில் மாருதி நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த காரை அப்டேட் செய்து வெளியிட்ட நிலையில், மீண்டும் இந்த காரை தற்போது உள்ள புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன்படி நாளை மே 9ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு தயாராகிறது. இதற்கு முன்னர் இந்த கார் இந்திய சாலைகளில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிந்தது.

இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிய நிலையில், இந்த காரில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி மக்கள் எதிர்பார்க்கும் பல முக்கிய தகவல்கள் புதிய அப்டேட் செய்யப்பட்ட காரில் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன நாம் எதிர்பார்த்த விஷயங்கள் இருக்கிறதா என்பது பற்றி பார்ப்போம்.

maruti swift launch

இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பை பொறுத்தவரை பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த டிசைனை கொஞ்சம் ஷார்ப்பாக மாற்றி உள்ளார்கள். காரின் முன் பகுதியில் புதிய வடிவமைப்பில் பம்பர் வழங்கப்பட்டுள்ளது. ரேடியேட்டர் கிரில் பகுதியும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கிரில்களுக்கு நடுவில் வழங்கப்படும் சுஸூகி நிறுவனத்தின் லோகோ இந்த அப்டேட்டில் பம்பர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோக இந்த காரின் ஹெட்லைட் மற்றும் ஃபாக் லைட் ஆகிய புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் சோல்டர் லைன்கள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலில் பின்பக்க டோரின் ஹேண்டில் சி பில்லர் பகுதியில் வழங்கப்பட்டிருந்தது மாற்றப்பட்டு பழைய மாடலிலேயே வழக்கமான ஹேண்டிலாக வழங்கப்பட்டுள்ளது.

maruti swift launch

இந்த காரின் பின்பகுதியில் பெயில் லேம்ப் C வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக புதிய டிசைனில் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க பம்பரும் மாற்றப்பட்டுள்ளது. இதுபோக டேல் கேட்டில் ரியர் வியூ கேமர பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை பழைய காரை விட 15மீமி நீளமாகவும், 40மீமி அகலம் குறைவாகவும், 30மீமி அதிக உயரமாகவும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீல்பேஸை பொருத்தவரை அதே 2450மிமீ வீல் பேஸ் தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை மாருதி நிறுவனத்தின் மற்ற கார்களான ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா, பலேனோ ஆகிய கார்களின் வடிவமைப்பு போலவே இந்த காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ப்ரீ ஸ்டாண்டிங் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மத்தியில் புதிய சென்ட்ரல் ஏசி வென்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் லேசாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு டிசைனும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய அப்ஹோல்சரி கொண்டு இந்த காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் சார்ஜர் பின்பக்க ஏசி வெண்ட்கள், எல்இடி ஃபாக் லேம்ப் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தவரை 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்டெட் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஸ்டேரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் விங் மிரர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக இஎஸ்சி,ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. தற்போது விற்பனையாகி வரும் மாடலில் இரண்டு ஏர் பேக்குகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏர் பேக் விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய விதிமுறையை பின்பற்றி தான் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 1.2லிட்டர் 3 சிலிண்டர் Z12 இன்ஜின் பொருத்தப்படுகிறது. தற்போது விற்பனையாகி வரும் காரில் கே சிரீஸ் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் தற்போது மாற்றப்பட்டு புதிய இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 25.72கிலோமீட்டர் மைலேஜ் தரும் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்போது விற்பனையாகி வரும் மாடலை விட 3கிலோமீட்டர் அதிகமாக மைலேஜ் தருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது இதனால் இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். முக்கியமாக இந்த கார் நல்ல மைலேஜ் தரும் காராக வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த நிலையில், 25 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என நிறுவனம் அறிவித்துள்ளது பலரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 7:00 [IST]
English summary
Maruti swift launch expectations on this popular hatchback
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X