வெறும் ரூ65,000 இருந்தாலே புது ஸ்விஃப்ட் காரை வாங்கிடலாம் எப்படி தெரியுமா? தெளிவான விபரங்கள்

புதிதாக கார் வாங்க நினைக்கும் பலர் லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டியது இருக்கும். கார் வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் தேவைப்படும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் இன்று கார் வாங்குவதற்கு அவ்வளவு அதிகமான பணம் தேவையில்லை. பெரும்பாலான பணத்தை கடனாக பல்வேறு வங்கிகள் வழங்கி வருகின்றன. இப்படியாக மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரை வெறும் ரூபாய் 65,000 இருந்தால் வாங்கிவிடலாம். இது குறித்து விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது இந்த கார் ரூபாய் 6.49 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. மற்றும் 11 விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இருப்பதிலேயே டாப் வேரியன்ட் ரூபாய் 9.64 லட்சம் என்று விலையில் விற்பனையாகி வருகிறது.

Maruti swift loan emi calculator

நீங்கள் இந்த காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு பட்ஜெட் பிரச்சனை இருக்கிறது என்றால் நீங்கள் இந்த காரை இஎம்ஐ மூலம் வாங்க முடியும். இப்படி வாங்கும் போது நீங்கள் கையில் இருந்து ரூபாய் 64,900 கொடுத்தால் போதும். மிச்ச பணம் வங்கிகடன் மூலம் பெற்று, இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். உங்களது வருமானம் மற்றும் சிபில் ஸ்கோர் ஆகியவற்றை கணக்கிட்டு 100% வரை வாகனங்களுக்கு கடன் வழங்குகின்றன.

இப்படியாக கடன் வாங்கி வாகனம் வாங்கும்போது அதை திருப்பி செலுத்தும் முறை வட்டி குறித்த விபரங்களை பற்றி பார்ப்போம். இந்த காரின் பேஸ் வேரியன்ட் ரூ6.49 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் 10% முன்பணம் என்றால் 64,900 முன்பணமாக செலுத்த வேண்டும். ரூ5.84 லட்சம் கடனாக வழங்கப்படும். மாதம் 9,398 ரூபாய் செலுத்தினால் 7 ஆண்டுகளில் இந்த கடனை உங்களால் அடைத்து விட முடியும்.

Maruti swift loan emi calculator

அடுத்ததாக விஎக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்த வரை ரூ7.29 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால் ரூபாய் 72,950 முன்பணம் செலுத்தினால் போதும். மிச்சம் உள்ள ரூ 6.56 லட்சம் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனை அடைக்க நீங்கள் மாதம் ரூபாய் 10,536 இஎம்ஐயாக அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செலுத்தினால் அந்த கடனை முழுமுதமாக நீங்கள் அடைத்து விட முடியும்.

அடுத்ததாக விஎக்ஸ்ஐ ஏஎம்டி வேரியன்டை பொறுத்தவரை எக்ஸ்ஷோரூம் விலையில் ரூபாய் 7.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் முன்பணமாக ரூபாய் 77,950 செலுத்தினால் போதும் மீதமுள்ள ரூபாய் 7.01 லட்சம் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனை அடைக்க ரூபாய் 11,287 நீங்கள் மாதத் தவணையாக அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செலுத்தினால் இந்த கார் உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

Maruti swift loan emi calculator

அடுத்ததாக விஎக்ஸ்ஐ(ஓ) வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 7.56 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு ரூபாய் 75,650 முன்பணமாக செலுத்தினால் போதும். மீதமுள்ள ரூ6.80 லட்சம் பணம் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனை திருப்பி செலுத்த ரூபாய் 10,954 என்ற பணத்தை இஎம்ஐயாக தவணை முறையில் செலுத்தினால் போதும். அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த காரின் கடனை அடைத்து விடலாம்.

விஎக்ஸ்ஐ (ஓ) ஏஎம்டி காரை பொருத்தவரை எக்ஸ்ஷோரூம் விலையில் ரூபாய் 8.06 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 80,650 முன்பணமாக செலுத்தினால் போதும். மீதமுள்ள ரூபாய் 7.25 லட்சத்தை நீங்கள் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை திருப்பி அடிக்க மாதம் ரூபாய் 11,678 இஎம்ஐயாக செலுத்தினால் அடுத்த 7 ஆண்டுகளில் கடன் முழுவதுமாக திரும்ப அடைந்துவிடும்.

இந்த காரின் இசட்எக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்த வரை ரூபாய் 8.29 லட்சம் என்ற எக்ஸ்ஷோரும் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 82,950 முன்பணமாக செலுத்த வேண்டும் மீதமுள்ள ரூ 7.46 லட்சம் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனை திரும்ப அழைக்க மாதம் ரூபாய் 12,011 என்ற தொகையை மாதத்தவனையாக அடுத்த 7 ஆண்டுகளுக்கு செலுத்தினால் கடன் முழுவதுமாக அடைந்து விடும்.

இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி பொறுத்தவரை ரூபாய் 8.79 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை நீங்கள் பெற ரூபாய் 87,950 முன்பணமாக பெற வேண்டும். பாக்கியுள்ள ரூ7.91 லட்சம் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனை திரும்ப அடக்கி அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 12,735 இஎம்ஐயாக செலுத்தினால் 7 ஆண்டுகளில் கடனை அடைத்து விடலாம்.

இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 8.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை பெற வேண்டும் என்றால் ரூபாய் 89,950 முன்பணமாக செலுத்த வேண்டும். பாக்கியுள்ள 8.09 லட்சம் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனை திரும்ப அடக்கிய மாதம் ரூபாய் 13,025 அடுத்த 7 ஆண்டுகளுக்கு செலுத்தினால் இந்த கடனை முழுவதுமாக அடைத்து விடலாம்.

இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏஎம்டி வேரியண்ட்டை பொறுத்தவரை ரூபாய் 9.49 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு ரூபாய் 94,950 முன்பணமாக செலுத்த வேண்டும். பாக்கியுள்ள ரூ8.54 லட்சத்தை கடனாக பெற வேண்டும். மாதம் ரூபாய் 13,749 இஎம்ஐயாக அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செலுத்தினால் மொத்த கடனும் அடைந்து விடும்.

அடுத்ததாக இசட்எக்ஸ் டிடி வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 9.14 லட்சம் என்ற ஷோரூம் விலையில் விற்பனை ஆகி வருகிறது. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 99,450 முன்பணமாக செலுத்த வேண்டும். பாக்கி உள்ள 8.23 லட்சம் உங்கள் கடனாக வழங்கப்படும். இதை திரும்ப செலுத்து அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மாதம் 13,242 செலுத்தினால் 7 ஆண்டுகளில் கடன் மொத்தமாக அடைந்து விடும்.

இறுதியாக டாப் வேரியன்டான இசட்எக்ஸ்ஐ டிடி வேரியன்டை பொறுத்த வரை ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 96,450 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த காருக்கு ரூபாய் 8.68 லட்சம் வரை கடன் வழங்கப்படும் 13,966 இஎம்ஐ செலுத்தினால் 7 ஆண்டுகளில் கடன் மொத்தமாக அடைந்துவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனங்களுக்கான கடன் தொகை என்பது வாகன எக்ஸ்ஷோரூம் விலையில் 90 சதவீதம் என கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. உங்களது வருமானம் மற்றும் உங்களது சிபில் ஸ்கோரை பொறுத்து உங்களுக்கு வழங்கப்படும். எலிஜிபிலிட்டி மாறுபடும் இதனால் நீங்கள் வாகனம் வாங்கும் போது இந்த கடன் தொகையில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். முழு விபரங்களையும் ஷோரூம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 11:49 [IST]
English summary
Maruti swift loan emi calculator interest details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X