மத்த காரெல்லாம் எல்லாம் 20-22ன்னு மைலேஜ் தருது! ஆனா புது ஸ்விஃப்ட் எவ்வளவு மைலேஜ் தரும் தெரியுமா?

மாருதி நிறுவனம் இன்று தனது நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மக்கள் பலர் எதிர்பார்த்த நிலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் உள்ள சிறப்பம்சமே இதில் புதிய இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் இசட் சீரியஸ் என்ற 3 சிலிண்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜினை இதில் பொருத்தியுள்ளது.

இதனால் இந்த காரின் மைலேஜ் பழைய மாடல் காரை விட அதிகமாக இருக்கிறது. மேனுவல் கியர் உள்ள கார் 24.8 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர் உள்ள கார் 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

maruti swift mileage comparison

இது பலருக்கும் பெரும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. இந்த மைலேஜ் மிக அதிகமான மைலேஜாக மக்கள் பார்க்கிறார்கள். இந்நிலையில் மார்க்கெட்டில் உள்ள இதே செக்மென்டில் உள்ள கார்களின் மைலேஜ் இருக்கும் இந்த கார்களில் மைலேஜ் இருக்கும் ஒரு ஒப்பீட்டை இங்கே பார்ப்போம்.

முதலில் நாம் ஸ்விஃப்ட் காரின் பழைய மாடல் காரின் மைலேஜ் குறித்த தகவல்களை பார்ப்போம். பழைய மாடலில் பெட்ரோல் மேனுவல் கியரில் 22.38 கிலோமீட்டர் மைலேஜூம் ஆட்டோமேட்டிக் கியரில் 22.56 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்கும் திறன் கொண்டதாக இருந்தது. தற்போது அதை ஒப்பிடும்போது புதிய அப்டேட்டில் உள்ள கார் 2.42 கிலோமீட்டர் மைலேஜ், மேனுவல் 3.19 கிலோ மீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் கியரிலும் அதிகரித்து தற்போது வெளியாகி உள்ளது.

maruti swift mileage comparison

இதுபோக மார்க்கெட்டில் இதே செக்மெண்டில் டாடா நிறுவனத்தின் டியாகோ கார், ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, சிட்ரோன் நிறுவனத்தின் சி3, ஆகிய கார்கள் இருக்கிறது. இதுபோக விலை அடிப்படையில் பார்த்தால் பஞ்ச், எக்ஸ்டர் மற்றும் இக்னீஷ் ஆகிய கார்களும் கிட்டத்தட்ட இதே விலையில் தான் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன. இந்த கார்களின் மைலேஜ் எப்படி இருக்கிறது என தற்போது பார்ப்போம்.

மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோல் மேனுவல் வேரியன்டில் 20.7 கிலோமீட்டர் மைலேஜ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்டில் 20.1 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்ததாக சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. அந்த கார் 19.8 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக தெரிவித்துள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கிடையாது.

maruti swift mileage comparison

அடுத்ததாக மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் காரை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காரிலும், 20.89 கிலோமீட்டர் மைலேஜ் தான் தருகிறது. அடுத்ததாக டாடா நிறுவனத்தின் டியாகோ காரை பொறுத்தவரை இதே போல மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டிலும் 20.09 கிலோமீட்டர் மைலேஜ் தான் தருகிறது.

அடுத்ததாக மைக்ரோ எஸ்யூவி செக்மண்டான எக்ஸ்டர் மற்றும் பஞ்ச் காரின் மைலேஜ் விபரங்களை பார்க்கும்போது எக்ஸ்டர் காரின் மைலேஜ் பெட்ரோல் மேனுவல் ஆப்ஷனில் 19.4 கிலோமீட்டர் மைலேஜ், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் 19.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கப்படுகிறது. அடுத்ததாக பஞ்ச் காரைப் பொறுத்தவரை பெட்ரோல் மேனுவல் காரில் 18.97 கிலோமீட்டர் மைலேஜ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரில் 18.82 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கப்படுகிறது.

புதிய கிப்ட் காரின் விலையை பொருத்தவரை தற்போது பிரீமியம் ஹாட்ஸ்பாட் செக்மெண்டில் விற்பனையாகி வரும் பலேனோ கிளான்ஸா, i20 மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களின் விலையையும் ஓரளவு ஒத்துப் போய் இருப்பதால் அந்த கார்களை வாங்குபவர்களுக்கும் ஸ்விஃப்ட் கார் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கிறது. அதன் மைலேஜ் ஒப்பிட்டு பார்ப்போம்.

அதன்படி மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் பெட்ரோல் மேனுவல் 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் வெர்ஷனில் 22.94 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகிறது. 22.35 கிலோமீட்டர் மைலேஜ் மேனுவல் கியர்பாக்ஸிலும் 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸிலும் வழங்குகிறது.

அடுத்ததாக ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காரை பார்ப்போம். இதில் மேனுவல் கியர் ஆப்ஷன் 20.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் 19.65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அடுத்ததாக டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரை பொருத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு கியர் ஆப்ஷனிலும் 19.33 கிலோ மீட்டர் மைலேஜ் தான் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பவர்கள் மார்க்கெட்டில் உள்ள மற்ற கார்களையும் செக் செய்து பார்த்து, மைலேஜ் செக் செய்தால் எந்த காரை விடவும் மாருதி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் தான் அதிகமாக இருக்கிறது. அதனால் மைலேஜ் மனதில் வைத்து வாங்குபவர்களுக்கு மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் நிச்சயம் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 16:32 [IST]
English summary
Maruti swift mileage comparison fuel efficiency with rivals
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X