ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டுன அனுபவம் வேணுமா! ஸ்விஃப்ட் கார் மாடலில் ரேசிங் ரோட்ஸ்டர் எடிசன்!
மாருதி சுஸுகி நிறுவனம் யாருமே எதிர்பார்த்திராத விலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை ஸ்விஃப்ட் (New Gen Maruti Suzuki Swift) கார் மாடலை நேற்றைய (மோ 9) தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 6.49 லட்சம் தொடங்கி ரூ. 9.65 லட்சம் வரையில் இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது அந்நிறுவனம் ஓர் சிறப்பு பதிப்பு ஸ்விஃப்ட் கார் மாடல் ஒன்றையும் வெளியீடு செய்தது. ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டர் எடிசன் (Swift Racing Roadster Edition) எனும் பதிப்பையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான அலங்கரிப்பையே இந்த பதிப்பிற்கு மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக தனித்துவமான நிறங்களைக் கொண்டு இதன் உடல் பாகங்களை மாருதி சுஸுகி அலங்காரம் செய்திருக்கின்றது. அதிலும், பான்னெட் மீது கருப்பு வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டு இருக்கும் கோடும், சிவப்பு நிற இன்செர்ட்டுகளும் கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்தை இந்த காருக்கு வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
சிவப்பு நிற இன்செர்ட்டுகளை, காரின் முன் பக்க பம்பர், வீல் மற்றும் கதவுகள் ஆகியவற்றில் காண முடிகின்றது. இத்துடன், காரின் பின் பக்கத்தில் மேற்கூரையின் முனையிலிலும், கீழ் பகுதி முனையிலும் சிவப்பு நிற இன்செர்ட் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அலங்கார வேலைகளே ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டர் எடிசனை அதிக கவர்ச்சியானதாக மாற்றி இருக்கின்றன.

காரின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல உள்பக்கத்திலும் இந்த மாதிரியான அலங்கரிப்பு வேலையையே மாருதி சுஸுகி செய்கின்றது. டேஷ்போர்டு, நுழைவு வாயில், இருக்கைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு நிற அலங்காரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, ஸ்போர்ட்ஸ் கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற இருக்கையே இந்த காரிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
எனவே இந்த காரின் லுக் மட்டுமல்ல ரைடு அனுபவமும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக இருக்கும் என தெரிகின்றது. இந்த மாற்றங்களே வழக்கமான ஸ்விஃப்ட் கார் மாடலில் இருந்து ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டர் எடிசனைக் வேறுபடுத்திக் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான அலங்கரிப்பாலேயே வழக்கமான பதிப்பைக் காட்டிலும் சற்று அதிக விலையைக் கொண்டதாக ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டர் எடிசன் காட்சியளிக்கின்றது.

வழக்கமான ஸ்விஃப்டைக் காட்டிலும் ரூ. 30,900 முதல் 40,500 ரூபாய் வரையில் அதிக விலையில் அது விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், இந்த அலங்காரப் பொருட்களை தனியாகவும் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இந்த அலங்கார வேலையை தவிர வேறு எந்த மாற்றத்தையும் ரேசிங் ரோட்ஸ்டர் பதிப்புக் கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான ஸ்விஃப்ட் கார் மாடலில் என்ன எஞ்சின் இடம் பெற்றிருக்குமே அதே எஞ்சினே இதிலும் இடம் பெற்றிருக்கும். புதிய இசட் சீரிஸ் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 25.75கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. 1.2லிட்டர் 3சிலிண்டர் எஞ்சின் உடன் சேர்த்தே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய ஸ்விஃப்ட் மைலேஜ் தருவதில் மட்டுமல்ல பாதுகாப்பை தருவதிலும் மிக சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது. 6ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்ட உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரேஸ் கார் பிரியர்களைக் கவரும் நோக்கிலேயே மாருதி சுஸுகி தற்போது ஸ்விஃப்ட் கார் மாடலில் புதிய ரேசிங் ரோட்ஸ்டர் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுவும் இந்தியர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









