25 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை இத்தனை பேர் வாங்கிட்டாங்களா? விலையும் ரொம்ப கம்மி தான்!
மாருதி நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்காக பலர் காத்திருந்த நிலையில், தற்போது இந்த காரை ஏகப்பட்ட நபர்கள் புக் செய்து வாங்கி வருகிறார்கள். புதிய அப்டேட்டிற்கு பிறகு இந்த கார் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. இப்படியாக கடந்த ஜூலை மாதம் இந்த காரின் விற்பனை எவ்வளவு என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டு வருகின்றன. அதன்படி மாருதி நிறுவனமும் தங்களது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இடத்திலிருந்து டாடா பஞ்ச் காரின் விற்பனை தற்போது 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஹூண்டாய் கிரெட்டா கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வாகனமாக மாறியுள்ளது.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார் பட்டியலில் இரண்டு கார்கள் மட்டுமே ஹேட்ச்பேக் கார்களாக இருக்கின்றன. அதில் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 16,854 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனையை 2023ம் ஆண்டு நடந்த விற்பனையுடன் ஒப்பிடும்போது 5.82 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சி தான். இருந்தாலும் சமீபத்தில் செய்யப்பட்ட அப்டேட்டிற்கு பிறகு அதிக எண்ணிக்கையில் மக்கள் இந்த காரை வாங்கி வருகிறார்கள்.
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய கார்கள் தான் உள்ளன. இதில் ஸ்விஃப்ட் கார் தான் மக்களை அதிகம் ஈர்த்துள்ளது. ஸ்விஃப்ட் காரில் சமீபத்தில் செய்யப்பட்ட புதிய அப்டேட்டில் உட்பக்கம் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, ஒயர்லெஸ் போன் சார்ஜர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த காரின் பாதுகாப்பு அமைப்பதற்காக 6 ஏர்போக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார், பின்பக்க பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 6.49 லட்சம் முதல் ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
மாருதி நிறுவனம் இந்த ஸ்விஃப்ட் கார் அப்டேட் செய்யும் போது அதன் இன்ஜினை முழுமையாக மாற்றி உள்ளது. அதன்படி இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட் சீரியஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82பிஎச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

இந்த காரின் சிறப்பம்சமே இதன் மைலேஜ் தான். இந்த கார் பெட்ரோல் மேனுவல் வேரியண்டில் 24.8 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. அதுவே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 25.75 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் தான் இருப்பதிலேயே அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
மாதிரி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த கார்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. ஒரு காலத்தில் சிறுவர்களாக இருக்கும் போது இந்த காரை வாங்க வேண்டும் என நினைத்த பலர் இன்று இந்த கனவை நினைவாக்கி வருகிறார்கள். அதன் காரணமாக தொடர்ந்து இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
இது மட்டுமல்ல மாருதி நிறுவனம் இந்த காரை தற்போது உள்ள டிரெண்டிற்கு ஏற்ப மாற்றிக் கொண்டே வருகிறது. பல்வேறு அம்சங்களை உட்புகுத்தி உள்ளது. மார்டனான பல்வேறு விஷயங்கள் இருந்த காருக்குள் இருப்பதால் தொடர்ந்து இந்த கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அடுத்த மாதம் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் நம்பர் 1 காராக இது மாறக்கூட வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு என்று தனி இடம் இருக்கிறது. இந்த காரின் அப்டேட்டுக்காக நீண்ட நாட்கள் மக்கள் காத்திருந்த நிலையில், அப்டேட் வந்த பிறகு மக்கள் பலன் இந்த காரை புக் செய்து வாங்கி வருகிறார்கள் தற்போது இந்த கார் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









