லோனும் வாங்க வேணாம், முன்பணமும் தேவையில்லை, ஈஸியா புது ஸ்விஃப்ட் காரை இப்படியும் வாங்கலாமா?

நீண்ட எதிர்பார்ப்பு கிடையில் மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை வாங்குவதற்கு எவ்வளவு லோன் போட வேண்டும் எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும் என பல்வேறு விதமான கணக்கீடுகளை செய்து வருகிறார்கள். லோன் போடாமல் முன்பணமும் செலுத்தாமல், முழு தொகையும் கொடுக்காமல் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து வெளியிட்டது. ரூபாய் 6.49 லட்சம் முதல் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த காரில் இசட் சீரியஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் மைலேஜ் அதிகமாக கிடைக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 25.75 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இந்நிலையில் இந்த காரை வாங்குவதற்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது.

maruti swift subscription

இந்த செக்மெண்டிலேயே அதிக மைலேஜ் தரும் கார் இதுதான் என்பதால் இந்த காரை வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி வருகிறார்கள். பலர் போட்டி நிறுவனங்களின் காருடன் ஒப்பிட்டு பார்த்து இந்த கார் சிறந்ததா என தேடி வருகின்றனர். இதனால் பலர் இந்த காரை வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் எவ்வளவு பணம் லோன் போட வேண்டும் எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும் என கணக்கீடுகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாருதி நிறுவனம் லோன் போடாமல் முழு தொகையும் செலுத்தாமல் முன்பணமும் செலுத்தாமல் இந்த காரை சொந்தமாக்கி கொள்ள ஒரு புதிய வழி ஒன்றை அறிவித்துள்ளது. பலருக்கும் இப்படியான ஒரு வழி இருப்பதே தெரியாது. அதுதான் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் காரை பெறுவது. இந்த முறையில் காரை பெறும்போது நாம் முன்பணமோ லோன் வாங்கவோ தேவையில்லை.

maruti swift subscription

சப்ஸ்கிரிப்ஷன் என்றால் மாதம் குறிப்பிட்ட அளவு பணத்தொகையை மாருதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். அப்படியாக செலுத்தினால் நீங்கள் மாருதி நிறுவனத்தின் இந்த ஸ்விஃப்ட் காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் சொந்த கார் போல இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் மாதம் மாதம் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் என்றால் வாடகை கட்டணமா என நீங்கள் கேட்கலாம். இது வாடகை கிடையாது, இந்த கட்டணத்துடன் சேர்ந்து வாகனத்தின் விலை, சாலை வரி, இன்சூரன்ஸ், பராமரிப்பு செலவு உள்ளிட்ட அனைத்து விதமான செலவுகளும் உள்ளடங்குகிறது. காரை பெறுபவர்கள் எரிபொருளை மட்டும் நிரப்பிக் கொண்டு அந்த வாகனத்தை தங்கள் சொந்த வாகனம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

maruti swift subscription

வாகனத்திற்கான ரிப்பேர் செலவு வரும் போது நீங்கள் ஷோரூமிற்கு சென்றால் அவர்கள் இலவசமாகவே சப்ஸ்கிரிப்ஷன் முறையில் பெறப்பட்ட வாகனத்திற்கு சர்வீஸ் செய்து கொடுத்து விடுவார்கள். அதே நேரம் வாகனம் விபத்தில் சிக்கிவிட்டாலும் இதற்கான இன்சூரன்ஸ் பணம் மூலம் அந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதனால் வாடிக்கையாளர் கையில் இருந்து பணம் எதுவும் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறை என்பது எவ்வளவு காலத்திற்கு என்பதை பொறுத்து அதன் விலை மாறுபடும். குறைந்தது ஒரு ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை இந்த காரை சப்ஸ்கிரைப் முறையில் வாடிக்கையாளர்களாக பெற முடியும். அவர்கள் தேர்வு செய்யும் மாடல் பொறுத்து சப்ஸ்கிரிப்ஷன் விலை மாறுபட வாய்ப்புள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை ரூபாய் 17,436 என்பது குறைந்தபட்ச கட்டணமாக இருக்கிறது. இதன் வேரியண்ட் மற்றும் சப்ஸ்க்ரிப்ஷன் கால அளவு குறித்து இந்த சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் என்பது மாறுபடும். நாம் லோன் மூலம் காரை வாங்கிவிட்டு அதற்கு லோனை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு விதமான செலவுகளை செய்து வருவோம். அதற்கு பதிலாக இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் முறையில் காரை வாங்கலாம்.

சப்ஸ்கிரிப்ஷன் முறையில் காரை வாங்குபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த காரை மாற்றிவிட்டு அந்நிறுவனத்தின் வேறு புதிய சஸ்கிரிப்ஷன் காரை கூட வாங்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையில் காரை வாங்கும் திட்டம் இந்தியா முழுவதும் அவர்களுக்கு வரவில்லை முக்கியமாக குறிப்பிட்ட பெரிய நகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையில் காரை வாங்கும் திட்டம் அமலில் இருக்கிறது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் நிச்சயம் இந்த காரை சப்ஸ்கிரைப் முறையில் வாங்க முடியும். ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சப்ஸ்கிரைப் முறையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். உங்களது ஆவணங்களை சோதனை செய்த பிறகு உங்களுக்கு சப்ஸ்க்ரைப் பற்றி முறையில் வாகனங்களை வழங்கலாமா வேண்டாமா என அனைவரும் முடிவு செய்யும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 16:11 [IST]
English summary
Maruti swift subscription rs 17436 monthly
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X