டாடாவை காப்பியடித்து சிஎன்ஜி காரில் முக்கிய மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி! இது சூப்பர் ஐடியாவாச்சே!

மாருதி நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை புகுத்தி எஸ்- சிஎன்ஜி என்ற பிளாட்ஃபார்மில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த எஸ்-சிஎன்ஜி பிளாட்பார்மில் புதிய அப்டேட்களை அந்நிறுவனம் கொண்டு வரப் போவதாக தற்போது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த டீசர் மூலம் ஆட்டோமொபைல் பிரியர்கள் பலர் இந்த அப்டேட்டில் மாருதி நிறுவனம் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறார்கள். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகனங்களுக்கு மைலேஜ் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மைலேஜ் அதிகமாக இருக்கும் வாகனங்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதிகமாக விற்பனையாகிறது. நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் மைலேஜ் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

maruti teases new cng

சிஎன்ஜி தொழில்நுட்பத்தை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுவும் குறைகிறது. அதேநேரம் வாகனத்திற்கு அதிக மைலேஜும் கிடைப்பதால் மக்கள் பலர் இந்த வாகனங்களை அதிகம் விரும்பி வருகிறார்கள். இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பூட் வசதி தான். இந்த வாகனத்திற்காக பொருத்தப்படும் சிலிண்டர் என்பது வாகனத்தின் பூட் பகுதியில் பொருத்தப்படுகிறது.

மிகப்பெரிய சிலிண்டராக பூட் பகுதியில் இது பொருத்தப்படுவதால் பூட் இடவசதி என்பது இந்த ரக வாகனங்களில் குறைவாக இருக்கும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக டாடா நிறுவனம் தனது சிஎன்ஜி வாகனங்களில் 2சிலிண்டர் கொண்ட செட்டப்பை உருவாக்கியது. அதன்படி 30லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சிலிண்டர்கள் உருவாக்கப்பட்டு. இது பூட் பகுதிக்கு கீழே இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக மக்கள் பூட்டு பகுதியை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

maruti teases new cng

இந்தியாவைப் பொறுத்தவரை மாருதி நிறுவனம் தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது ஆலையிலேயே சிஎன்ஜி தொழில்நுட்பத்தை ஃபிட்டிங் செய்வதை எஸ்-சிஎன்ஜி பிளாட்பார்ம் என அழைக்கிறது. இது பாதுகாப்பாகவும் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் வழங்க கூடியதாகவும் எளிமையாகவும் அதிக மைலேஜ் மற்றும் உழைப்பை வழங்கக் கூடியதாக இருக்கிறது.

மாருதி நிறுவனம் தற்போது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வெளியான பிறகு மக்கள் மத்தியில் மாருதி நிறுவனமும், டாடா நிறுவனம் போல டூயல் டேங்க் சிஎன்ஜி சிலிண்டர் செட்டப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் தற்போது பயன்படுத்தி வரும் 55-60 லிட்டர் கொண்ட சிஎன்ஜி டேங்க் பூட் பகுதியில் அதிக இட வசதியை எடுத்துக் கொள்வதால் இது மிகப் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

maruti teases new cng

இந்த பிரச்சினையை இந்த அப்டேட்டில் அந்த நிறுவனம் சரி செய்வதற்காக இந்த ட்வின் சிலிண்டர் செட்டப்பை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனத்திற்கு இந்த ட்வின் டேங்க் செட்டப் ஒன்றும் புதிது அல்ல. இந்நிறுவனத்தின் இலகு ரக கமர்ஷியல் வாகனமாக சூப்பர் கேரி வாகனத்தில் இப்படியான ட்வின் டேங்க் செட்டப் உடன் தான் விற்பனைக்கு வருகிறது. இதே செட்டப்பை அந்நிறுவனம் பயணிகள் காரில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி நிறுவனத்தின் சிஎன்ஜி கார் பட்டியலில் தற்போது ஆல்டோ கே10, வேகன்ஆர், டிசையர், செலிரியோ, ஈக்கோ, எஸ்பிரெஸ்ஸோ, கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. விரைவில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரும் இணையப் போகிறது. 25 முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் என இரண்டு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு சிஎன்ஜி கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை இதை அதிகாரப்பூர்வமாக மாருதி நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், பொதுமக்கள் மத்தியில் இப்படியான பேச்சு எழுந்து வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை மாருதி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இப்படி வெளியிட்டால் மாருதி நிறுவனத்தின் விற்பனை இன்னும் அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் பலருக்கு பூட் வசதி குறைவாக இருப்பது தான் சிஎன்ஜி காரில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு விதமான யோசனைகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முன்னெடுத்தாலும், டாடா நிறுவனம் பயன்படுத்திய யுக்தி மார்க்கெட்டில் வெற்றி பெற்றதால் இந்த யுத்தியை மாருதி நிறுவனமும் பயன்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2024, 11:58 [IST]
English summary
Maruti teases new cng twin tanks like tata
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X