ரோட்ல போய் எந்த பக்கம் திரும்பினாலும் இந்த காரை பார்க்கலாம்! 10 லட்சம் பேர் இந்த காரை வாங்கியிருக்காங்க!
மாருதி நிறுவனத்தின் கார்கள் சமீபத்தில் விற்பனையில் முக்கிய மைல் கல்லை எட்டிய நிலையில் அந்த பட்டியலில் தற்போது வேகன்ஆர் காரும் இணைந்துள்ளது. வேகன்ஆர் கார் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது. மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான காராக இந்த கார் தான் இருக்கிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரின் லேட்டஸ்ட் வெர்ஷன் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகமானது. அப்பொழுது முதல் இந்த சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 2024ம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் காராக வேகன்ஆர் கார் தான் இருக்கிறது. இது ஒன்றும் முதல் முறையில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கார் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 2,00,177 கார்கள் விற்பனையாகி உள்ளன.

இது 2023ம் ஆண்டு விற்பனையான கார்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 5.73 சதவீதம் குறைவான விற்பனை தான். இருந்தாலும், 2024ம் ஆண்டு மொத்தம் விற்பனையான 17.5 லட்சம் கார்களில் 11 சதவீதம் இந்த வேகன்ஆர் காரின் விற்பனை தான் இருக்கிறது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகியுள்ளது.
2025ம் நிதியாண்டு துவங்கி முதல் மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 46,312 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு முதல் மூன்று மாத விற்பனையை ஒப்பிடும்போது 15 சதவீதம் விற்பனை குறைவுதான் இருந்தாலும், தற்போது ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் வேகன்ஆர் கார் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு தான் இந்த வேகன்ஆர் கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமானது. அந்த நிதியாண்டில் 49,873 கார்களும் 2020ம் ஆண்டு நிதியாண்டில் 1,56,724 கார்களும் 2021ம் நிதியாண்டில் 1,60,330 கார்களும் 2022ம் நிதியாண்டில் 1,88,837 கார்களும், 2023ம் நிதியாண்டில் 2,12,340 கார்களும், 2024ம் நிதியாண்டில் 2,00,177 கார்களும் விற்பனையாகி உள்ளன. இந்த நிதியாண்டில் மொத்தம் 46,132 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த 6 ஆண்டுகளில் மட்டும் 10லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இந்த காரை வாங்கி உள்ளார்கள். முதன்முதலில் வேகன்ஆர் கார் கடந்த 1999ம் ஆண்டு தான் அறிமுகமானது. அப்பொழுது முதல் இப்பொழுது வரை 32.1லட்சம் பேர் இந்த காரை வாங்கி உள்ளார்கள். இந்த ஆண்டு இந்த கார் அறிமுகமாகி 25-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. 30லட்சம் கார் என்ற எண்ணிக்கையை கடந்த மே மாதம் தான் எட்டிப் பிடித்தது.

இந்த 2024ம் நிதியாண்டில் வேகன்ஆர் கார் 46,132 கார்கள் முதல் மூன்று மாதத்தில் விற்பனையாகிவிடும் நிலையில், மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் 44,471 கார்களும்,எர்டிகா கார் 43,339 கார்களும் பலேனோ கார் 41,786 கார்களும், டிசையர் கார் 45,307 கார்களும், ஸ்விஃப்ட் கார் 39,909 கார்களும் விற்பனையாகி உள்ளன. மாருதி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனையை பெற்று வருகிறது.
மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் காரை பொறுத்தவரை ஹார்ட்ரேட் பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது. இந்த கார் ரூ6.37 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகி ரூ8.81 லட்சம் என்ற விலை வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரில் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷனும், 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
வேகன்ஆர் காரை பொறுத்தவரை சிஎன்ஜி வேரியண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல் சிஎன்ஜி வேரியன்ட் கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் உள்ள மைலேஜ் தான் இந்த காரின் பிரபலத்திற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த கார் சிஎன்ஜி கார்களிலேயே அதிக மைலேஜ் தரும் காராக விற்பனையாகி வருகிறது.
மாருதி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமான கார்களாக மாறி வருகின்றன. இந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் மொத்தம் 1,59,031 சிஎன்ஜி வாகனங்கள் இதுவரை விற்பனையாகியுள்ளது. அதில் வேகன்ஆர் கார் தான் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த காரை கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் வாங்கி இருப்பது இந்த கார் சமீபகாலமாக எவ்வளவு பிரபலமாகி வருகிறது. இந்த கார் அறிமுகமான 25 ஆண்டுகளில் மொத்தமே 30 லட்சம் கார்கள் தான் விற்பனையாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









