டாக்டர், இன்ஜினியர்களே இந்த காரை தான் விரும்பி வாங்குறாங்க! விலையும் கம்மி, 33 கி.மீ மைலேஜூம் தரும்!

இந்திய மார்க்கெட்டில் எப்பொழுதுமே பட்ஜெட் கார்களுக்கு என்று தனி மரியாதை இருக்கும். குறைந்த பட்ஜெட் கார்களை இந்தியர்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இந்த பட்ஜெட் கார்தான் இருக்கிறது. இப்படியாக இந்தியாவில் டாக்டர் இன்ஜினியர் போன்ற மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட குறிப்பிட்ட இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள். இந்த கார் கொடுத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மனதிற்கு பிடித்த வாகனங்களை தான் வாங்குவார்கள். இப்படியாக நீண்ட ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்த வாகனமாக பல வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

maruti wagon r

இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக இந்த வாகனங்கள் எல்லாம் விற்பனையில் இருந்தாலும், தொடர்ந்து இந்த வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக பட்ஜெட் வாகனங்களில் இப்படியான பல வாகனங்கள் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் உள்ளன. மாருதி நிறுவனத்தின் 800 காருக்கு பிறகு மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த வாகனமாக வேகன்ஆர் கார் தான் இருக்கிறது.

இந்த கார் கடந்த 1999ம் ஆண்டு தான் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரின் இந்த சிறந்த விற்பனைக்கு முக்கியமான காரணம் இந்த கார் குறைந்த விலை அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு இருப்பதால் இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்குகிற வாங்கி வருகிறார்கள்.

maruti wagon r

இந்த காரை சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் பார்க்கப்படும் டாக்டர் இன்ஜினியர்கள் கூட விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரை மக்கள் விரும்பும் அளவிற்கு இதில் இருப்பது இதன் பட்ஜெட் தான். இந்த கார் 6-8 லட்சம் என்ற விலையில் இன்றும் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காரில் 5 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

வீட்டில் உள்ளவர்கள் உயரமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு போதுமான இட வசதி இந்த காரில் இருக்கிறது. கார் சீட்டில் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு முட்டியும் தட்டாதே தலைக்கு மேலே அதிக இடமும் இருக்கும். மேலும் இந்த கார் உயரமான கார் என்பதால் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. அதிக பொருட்களை எடுத்து செல்லும் பூட் வசதியும் பெரிதாக இருக்கிறது.

maruti wagon r

காருக்குள் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு பெரிய அளவில் அலுப்பு தெரியாமல் சொகுசான பயணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீண்ட தூர பயணத்திற்கு இந்த கார் ஒரு சிறந்த காராகவே இருக்கும். இதனால் மாதம் இப்பொழுது வரை 15,000 கார்கள் விற்பனையாகி வருகின்றன. மாருதி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் கார்களில் இந்த காரும் ஒன்றாக இருக்கிறது.

மாருதி நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. அதற்கு வேகன்ஆர் போன்ற கார்களை அறிமுகப்படுத்தியது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. மிடில் கிளாஸ் மக்கள் மற்றும் முதல் தலைமுறையில் காரை வாங்குபவர்கள் பலர் இந்த காரை தான் விரும்பி வாங்கி வருகிறார்கள்.

மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் காருக்கு மறு விற்பனை மதிப்பும் சிறப்பாக இருக்கிறது. இந்த காரை செகண்ட் ஹாண்ட் மார்க்கெட்டில் கூட பலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். புதிதாக கார் வாங்கியவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு காரை மாற்ற வேண்டும் என விரும்பினால் இந்த காரை விற்கும் போது அவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும்.

இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 23 முதல் 25 கிலோமீட்டர் வரை பெட்ரோல் இன்ஜினில் மைலேஜ் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .இதுவே சிஎன்ஜி ஆப்ஷனில் இருந்த காரை எடுக்கும்போது 33 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என ஆண் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக மைலேஜ் தரும் காராக இந்த கார் இருப்பதால் கூட இதன் விற்பனை அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி வேகன்ஆர் காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இதில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் நான்கு ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டேரிங் மவுண்ட் ஆடியோ கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் நேவிகேஷன் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் இரண்டு ஏர் பேக்குகள், இபிடியுன் கூடிய ஏபிஎஸ் பின்பக்க பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் இன்ஜினைப் பொறுத்தவரை 1.0 லிட்டர் கே சிரீஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . என் டாப் மாடலில் மட்டும் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 1.0 லிட்டர் இன்ஜினியரிங் ஆப்ஷன் விற்பனைக்கு வருகிறது. 1.2 லிட்டர் இன்ஜினை பொருத்தவரை 88.5பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி வேகன்ஆர் காரை பொருத்தவரை இந்தியாவில் பட்ஜெட்டில் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இது மொத்தம் நான்கு விதமான வேரியன்டுகளில் விற்பனைக்கு வருகிறது. இது போக சிஎன்ஜி ஆப்ஷன் உடனும் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. முதன்முதலாக கார் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் இந்த காரை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 5, 2024, 7:00 [IST]
English summary
Maruti wagon r budget friendly hatchback india under 7 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X