34 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை தான் இந்தியாவுல அதிகம் பேர் வாங்குறாங்க! ஏன் தெரியுமா?
மாருதி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் அதிகமான கார்களை விற்பனை செய்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகமான விற்பனையாக காராக மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது மாருதி. இது நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஒவ்வொரு மாதமும் மாருதி நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தை அடித்துக் கொள்ளும் அளவிற்கு இந்தியாவில் எந்த நிறுவனமும் வளர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதமும் மாருதி நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளன. இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் தான் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 19,412 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கார் 16,889 கார்கள் தான் விற்பனையாகி இருந்தன. தற்போது 15சதவீதம் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபமாக வேகன்ஆர் காரில் எந்தவிதமான அப்டேட்களும் வரவில்லை, என்றாலும் மக்கள் மத்தியில் இந்த வேகன் ஆர் காருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. தொடர்ந்து பல வேகன் ஆர் காரை தான் விரும்பி வாங்கி வருகிறார்கள். மக்களிடம் நன்மதிப்பை பெரும் அளவிற்கு இந்த வேகன் ஆர் காரில் என்ன இருக்கிறது? அதில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கிறது என்ற விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த செய்தி பதிவு.

மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் காரை பொருத்தவரை இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. முதல் இன்ஜின் ஆப்ஷன் 1லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 67பிஎஸ் பவரையும் 89என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இரண்டாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 90பிஎஸ் பவரையும் 113என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் இந்த வேகன் ஆர் காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. சிஎன்ஜியில் இயங்கும் இந்த கார் 57 பிஎஸ் பவரையும் 82.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் சிறப்பு அம்சமே இந்த காரில் உள்ள மைலேஜ் தான். இந்த கார் சிறப்பான மைலேஜ் தருவதால் மிடில் கிளாஸ் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் கார் 23.56 கிலோமீட்டர் மைலேஜையும், 1 லிட்டர் பெட்ரோல் ஏஎம்டி வேரியன்ட் கார் 24.43 கிலோமீட்டர் மைலேஜையும், 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கார் 24.35 கிலோமீட்டர் மைலேஜையும், 1.2 லிட்டர் பெட்ரோல் ஏஎம்டி கார் 25.19 கிலோமீட்டர் மைலேஜையும், 1 லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி கார் 34.0 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேகன் ஆர் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை இது ஒரு டால்பாய் டிசைன் வடிவமைப்பு கொண்ட கார் ஆகும். இதனால் இந்த காருக்குள்ளே அதிக இட வசதி என்பது இருக்கிறது. முக்கியமாக தலைக்கு மேலே அதிகமான இடம் வசதி இருப்பதால் உயரமானவர்கள் கூட இந்த காரில் எளிதாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் இந்த காரின் முன் பக்கம் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே இருக்கிறது.
மேலும் இந்த காரில் மியூசிக் சிஸ்டமாக 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் இருக்கிறது. இதுபோக இந்த மியூசிக் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காக ஸ்டேரிங்கிலேயே ஆடியோவை கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷனும், போனை கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 14 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் இருக்கிறது. பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
இந்த மாருதி வேகன்ஆர் காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 5.54 லட்சம் முதல் ரூபாய் 7.38 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இரண்டு விதமான சிஎன்ஜி வேரியன்ட்களில் இருக்கிறது. ரூ 6.45 லட்சம் முதல் ரூபாய் 6.89 லட்சம் என்ற விலையில் இது விற்பனையாகி வருகிறது. விலை குறைவாக இருப்பதால் இந்த காரை அதிக மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் பலர் சிறிய ரக கார்களை விரும்பி வருகின்றனர். தற்போது எஸ்யூவி ரக கட்டமைப்பு கொண்ட கார்கள் மத்தியில் மக்களுக்கு மவுசு இருக்கிறது வேகன் ஆர் காரை பொறுத்தவரை உயரமாக கிட்டத்தட்ட பார்ப்பதற்கு எஸ்யூவி கார் போல இருப்பதால் இந்த காரின் விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி பெறும்.


Click it and Unblock the Notifications









