இந்த மாருதி காரை வாங்கனும்னா 4 மாசம் காத்திருக்கனும்! எதிர்பாராத அளவுக்கு சேல்ஸ் பிச்சிக்கிட்டு போகுது!

மாருதி நிறுவனம் எஸ்யூபி செக்மெண்ட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது மாருதி நிறுவனத்தில் உள்ள எஸ்யூவி கார்களுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் நிறுவனத்தின் கார்களை வாங்குவதற்கான காத்திருப்பு காலம் என்பது அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஃபிராங்க்ஸ் புதிய மைல்கல் சாதனையை அறிவித்தது. இந்நிறுவனம் மிக விரைவாக ஃபிராங்க்ஸ் காரை தயாரித்து 1 லட்சம் கார்களை கடந்து விற்பனை செய்துள்ளது. இதுவும் வெறும் 10 மாதத்தில் இந்த சாதனையை செய்துள்ளது. எஸ்யூவி செக்மெண்டில் இந்த கார் சிறப்பான அளவு விற்பனையை பெற்று வருகிறது. இந்த கார் மூலம் எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனத்தின் மார்க்கெட் பங்கு இருமடங்காக அதிகரித்துள்ளது.

maruti waiting period

இந்த கார் முதல் முதலாக 2023-ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது. ரூபாய் 7.47 லட்சம் முதல் ரூபாய் 13.14 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது. இந்த காரில் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

1.0 லிட்டர் பூஸ்டர் டர்போ 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மாருதி நிறுவனத்தால் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் என்ட்ரி லெவல் சிஎன்ஜி ஸிக்மா வேரியண்ட் கார் புக் செய்தால் மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை காத்திருப்பு பட்டியலில் இருந்து காரை வாங்க வேண்டும் மற்ற விற்பனைக்கு தயாராக இருக்கிறது.

maruti waiting period

அடுத்ததாக கிராண்ட் விட்டாரா நிறுவனத்தையும் பிளாக்ஷிப் எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த கார் ரூபாய் 10.80 லட்சம் முதல் ரூபாய் 20.09 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் அது இருக்கும் செக்மெண்டிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் பார்ப்பதற்கு டொயோட்டா கார்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் போல இருக்கிறது.

இந்த காரை மாருதி நிறுவனத்திற்கு டொயோட்டா நிறுவனம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள தனது ஆலையில் தான் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறது. இந்த காரில் 1.5லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் 1.5லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் டெல்டா சிஎன்ஜி வேரியண்டிற்க்கு மற்றும் 4-6 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. மற்ற வேரியண்ட்கள் எல்லாம் தற்போது ஷோரூமில் விற்பனைக்கு தயாராக உள்ளன.

maruti waiting period

அடுத்ததாக இன்விக்டோ என்ற பிரீமியம் எம்பிவி கார் மாருதி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை தழுவி உருவாக்கப்பட்ட காராகும். இந்த கார் மாருதியின் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆல்பா பிளஸ் ஹைபிரிட் வேரியன்ட் காருக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

மற்ற வேரியன்ட் காரெல்லாம் தற்போது ஷோரூமில் விற்பனைக்கு தயாராக இருக்கின்றன. நீங்கள் சென்றால் உடனடியாக இந்த காரை முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ள முடியும். எந்த வித காத்திருப்பு காலமும் இல்லை. இந்த காரின் விலையைப் பொறுத்தவரை ரூ25.03 லட்சம் முதல் ரூ28.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

maruti waiting period

பொதுவாக மாருதி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருவதால் இதற்கு காத்திருப்பு காலம் என்பது பெரிய அளவில் இருக்காது. மாருதி நிறுவனத்திடம் அதிகமான தயாரிப்புத் திறன் இருப்பதால் அதிகமான கார்கள் விற்பனைக்கு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில வேரியண்ட்களுக்கு மட்டும் காத்திருப்பு காலம் என்பது அதிகமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் திறந்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனத்திற்கு பெரிய விற்பனை இல்லை என்ற பேச்சு தற்போது தலைகீழாக மாறி கிராண்ட் விட்டாரா, ஃபிராங்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையில் இருந்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 7:00 [IST]
English summary
Maruti waiting period fronx grand vitara invicto 4 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X