மஸராட்டி கிராண்டூரிஸ்மோ விற்பனைக்கு அறிமுகம்.. இந்திய பணக்காரர்களின் வீட்டை அலங்கரிக்க இருக்கும் புதிய கார்..

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மஸராட்டி (Maserati), இந்தியாவில் தன்னுடைய புதிய கிராண்டூரிஸ்மோ (GranTurismo) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அதிக திறன், அதிக ஆடம்பரம் மற்றும் அதிக புதுமை ஆகியவற்றை தாங்கிய ஓர் கார் மாடலே கிராண்டூரிஸ்மோ ஆகும். இதனையே மஸராட்டி இந்தியாவில் இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மாடலுக்கு அறிமுக விலையாக ரூ. 2.72 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்தியாவில் இந்த சூப்பரான சொகுசு கார் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மாடெனா (Modena) மற்றும் ட்ரோஃபியோ (Trofeo) ஆகியவையே அவை ஆகும். இதில் மாடெனாவே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதன் விலையையே முன்னதாக பார்த்தோம். ட்ரோபியோவிற்கு ரூ. 2.90 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

Maserati granturismo launched in india

இரண்டும் 2 டோர்களைக் கொண்ட கூபே வகை கார் மாடல் ஆகும். மேலும், இந்த இரண்டிலும் 3.0 லிட்டர் வி6 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இரண்டு வேரியண்டுகளிலும் வெவ்வேறு திறன்களை வெளியேற்றும் வகையில் அதிலம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இந்திய பணக்காரர்களைக் கவரும் விதமாக இந்த காரில் ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை மஸராட்டி வழங்கி இருக்கின்றது.

மஸராட்டி கிராண்டூரிஸ்மோ மாடெனா வேரியண்ட் பற்றிய விபரங்கள்: 12.2 அங்குல டிஜிட்டல்-டயல் திரை இந்த வேரியண்டில் கொடுக்கப்பட்டு இருக்கும். இத்துடன், மற்றுமொரு பெரிய திரையாக 12.3 அங்குலத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இக்காரில் கொடுக்கப்பட்டு இருக்கும். கூடுதலாக 8.8 அங்குல தொடுதிரை, க்ளைமேட் கன்ட்ரோலுக்குக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும்.

Maserati granturismo front design

இத்துடன், டிஜிட்டல் கிளாக், ஹெட்-அப் திரை மற்றும் சோனஸ் ஃபேப்ரே ஆடியோ சிஸ்டம் போன்றவையும் இந்த வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 490 எச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இதனால் வெறும் 3.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என கூறப்படுகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 302 கிமீ ஆகும்.

மஸராட்டி கிராண்டூரிஸ்மோ ட்ரோஃபியோ வேரியண்ட் பற்றிய விபரங்கள்: சிறப்பம்சங்கள் விஷயத்தில் மாடெனா உடன் இது ஒத்துப்போகும் வகையில் இருக்கின்றது. அதேவேளையில், லுக் மற்றும் திறன் வெளிப்பாட்டில் கொஞ்சம் முரட்டுத் தனமான தேர்வாக இது காட்சியளிக்கின்றது. இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வாகும்.

இந்த வேரியண்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 550 எச்பி மற்றும் 650 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும். இதுதவிர, இதனால் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும்.

இந்த அதீத திறனுக்கு ஏற்பவே ட்ரோஃபியோவின் முகப்பு பகுதியில் மிகவும் முரட்டுத் தனமான லுக் கொண்ட பம்பர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, காரின் கேபினும் அதிக ஸ்போர்ட்டி தனம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதேபோல், இந்த காரின் முன் பக்கத்தில் 20 அங்குல வீலும், பின் பக்கத்தில் 21 அங்கு வீலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய சூப்பரான இரண்டு கிராண்டூரிஸ்மோ தேர்வுகளையே மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அதேவேளையில் உலக சந்தையில் இந்த கார் மாடல் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மூன்றாவது ஒன்று எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். மஸராட்டி கிராண்டூரிஸ்மோ ஃபோல்கோரே எனும் பெயரிலேயே அது விற்கப்படுகின்றது. இந்த தேர்வை இந்தியாவில் மஸராட்டி விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. வரும் நாட்களில், அதாவது, சில மாத இடைவெளிக்கு பின்னர் இந்த தேர்வையும் மஸராட்டி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மஸராட்டி நிறுவனம் புதிய கிராண்டூரிஸ்மோ சொகுசு மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 16:46 [IST]
English summary
Maserati granturismo launched india price features and other details
மேலும்... #maserati #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+