டொயோட்டா ஹைரைடர் இவ்ளோ மைலேஜை தருமா? சில பைக்குகளே இந்த மைலேஜை தருவதில்லையே! இதுக்காகவே இந்த கார வாங்கலாம்!
இந்தியாவில் டொயோட்டா (Toyota) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser HyRyder) இருக்கின்றது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா கூட்டணியில் டொயோட்டா-வுக்காக தயார் செய்யப்பட்ட கார் மாடலே இதுவாகும். இந்த கார் மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 27.97 கிமீ வரையில் மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்திருக்கின்றது. இதற்கு அர்பன் க்ரூஸர் ஹைரடரில் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்ட்ராங்கான ஹைபிரிட் தொழில்நுட்பமே காரணம் ஆகும்.
இத்தகைய அதிகம் மைலேஜ் தரும் காரில் இருந்து அதிகபட்ச மைலேஜை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். உங்களின் வழக்கமான வாகனம் ஓட்டும் ஸ்டைலைக் கொஞ்சம்கூட மாற்றாமல், டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட்டில் எரிபொருள் சிக்கனத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதையே இந்த பகிர்ந்துள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஏற்கனவே கூறியதைப் போல மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாக்கப்பட்டதே அர்பன் க்ரூரஸ் ஹைரைடர் ஆகும். இதேபோல், மாருதி சுஸுகிக்காக தயார் செய்யப்பட்டதே கிராண்ட் விட்டாரா ஆகும். இருப்பினும், இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் இடையில் சில விஷயங்களில் வித்தியாசம் தென்படுகின்றது.
அந்தவகையில், ஹைரைடரை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் அதன் பிரேக்குகள் அழுத்தப்பட்டு இருக்க வேண்டும். அத்துடன், ஸ்டார்ட் பட்டனுக்கு அருகில் கீ ஃபோப் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோல், இந்த கார் பெட்ரோலுக்கு பதிலாக அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தியே இயங்குகின்றது. இதுதவிர, நார்மல், ஈகோ மற்றும் பவர் ஆகிய மோட்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், பிரத்யேக இவி மோடும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இதேபோல், போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியிருக்கும்போது அது பெட்ரோலுக்கு பதிலாக ஐடிலிங்கின் போது மின்சாரத்தையே பயன்படுத்தும். இத்துடன், கூடுதலாக பி மோட் உடன் கூடிய இ-சிவிடி (e-CVT),யும் இழக்கும் மின்சாரத்தை மீளுருவாக்கம் செய்வதற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இதுவே ஹைபிரிட் சிஸ்டத்தை விரைந்து சார்ஜாகவும் உதவுகிறது. இந்த செயல்களே எரிபொருள் சிக்கனத்திற்கும், சிறந்த மைலேஜை பெறுவதற்குமான போதுமான செயல் ஆகும். இதுதவிர, இன்னும் ஒரு சில குறிப்பிட்ட செயல்களைச் செய்வதன் வாயிலாக நம்மால் இன்னும் அதிக மைலேஜை டொயோட்டா ஹைரைடரில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக ஓட்டும் ஸ்டைலை மாற்ற வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதை செய்யாமலே ஹைரைடரில் நல்ல எரிபொருள் சிக்கனத்தைப் பெற முடியும். இந்த காரில் ஈகோ வழங்கப்பட்டு இருக்கும் ஈகோ மோடைப் பயன்படுத்தினால் ஹைரைடரில் அதிகபட்ச மைலேஜை பெற முடியும். ஆனால், செல்ஃப் சார்ஜாகுவதற்கான சிஸ்டத்தை தேவைக்கேற்ப ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
இவ்ழாறு செய்யும் பட்சத்தில் இந்த காரில் அதிகபட்சமாக 29 கிமீ முதல் 30 கிமீ வரையில் மைலேஜ் பெற முடியும். இதை எக்ஸ்பிரஸ் டிரைவ்ஸ்-ம் உறுதி செய்திருக்கின்றது. அதேவேளையில், இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் நார்மல் மோடைப் பயன்படுத்தினால் லிட்டருக்கு 25 கிமீ வரையில் மட்டுமே மைலேஜைப் பெற முடியும். ஏசி பயன்பாடு மற்றும் நடுநிலையான வேகம் போன்றவற்றை கையாளும் நிலையிலேயே இந்த ரேஞ்ஜ் திறனை நம்மால் பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைரைடர் ஹைப்ரிட் நிஜ-உலக பயணத்தில் மிக சிறந்த மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் ஃபுல் டேங்க் கொள்ளளவான 45 லிட்டரை நிரப்பினால் 900 கிமீக்கு மேல் பயணிக்க முடியும். எனவே, தினசரி பயன்பாட்டிற்கு உகந்த கார் மாடலாக இது பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








