அடுத்த வருஷம் டெலிவரி கொடுக்க போற காருக்கு டிமாண்ட் குவியுது.. 3.6 கோடி ரூபா காருக்கு இவ்ளோ வரவேற்பா!..
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Merceds Benz) இந்தியாவில் அதன் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய ஏஎம்ஜி ஜி 63 (AMG G 63) சொகுசு எஸ்யூவி (SUV) ரக கார் மாடலையே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் 13வது சொகுசு கார் மாடல் இதுவாகும்.
மேலும், இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே 120 யூனிட்டுகளுக்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 3.6 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இத்தகைய அதிக விலைக் கொண்ட காருக்கே இந்தியர்கள் மிகப் பெரிய ஆர்டரை வழங்கி இருக்கின்றனர். இது ஓர் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மற்றும் அதிக திறனை வெளியேற்றும் சொகுசு காராக காட்சியளிக்கின்றது. புதிய காஸ்மெட்டிக் மாற்றும் மற்றும் புதிய அம்சங்கள் சேர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டே இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, மெக்கானிக்கல் அப்டேட்டையும் மிகப் பெரிய அளவில் மெர்சிடிஸ் பென்ஸ் செய்திருக்கின்றது. ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என அனைத்து விதமான பயன்பாட்டு வசதிக் கொண்ட காராக மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி 63 காட்சியளிக்கின்றது. இந்த காரின் சிறந்த ஆஃப் ரோடு திறனுக்காக 229 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், இதனால் 700 மிமீ ஆழமுள்ள நீர் நிலைகளிலும் இயங்க முடியும். இத்தகைய தரமான திறன்களைக் கொண்டதாகவே மெர்சிடிஸ் பென்ஸ் அதன் புதிய ஏஎம்ஜி ஜி63-யை தயார் செய்திருக்கின்றனர். இத்துடன், மிக முக்கியமாக இந்த காரில் புதிய மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜியையும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த காரில் சேர்த்திருக்கின்றது.
4.0 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 576 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இத்துடன், 20 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனை மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜி வாயிலாக இந்த கார் பெறும் என்பகு கவனிக்கத்தகுந்தது.
கியர்பாக்ஸைப் பொருத்த வரை 9 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் பேடில் ஷிஃப்டர்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 4.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரில் சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு ஏஎம்ஜி ஆக்டீவ் ரைடு கன்ட்ரோல் (AMG Active Ride Control) அம்சம் வழங்கப்படுகின்றது. இதன் வாயிலாக ஹைட்ராலிக் (Hydraulic), ஆன்டி-ரோல் பார் ஃப்ரீ சஸ்பென்ஷன் டெக்னாலஜி (Anti-Rollbar Free Suspension Tech ) ஆகியவற்றை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடத்தில் இந்த கார் மாடலின் பழைய வெர்ஷன் மிக அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. ஆனால், இந்த காரை அவர் தன்னுடைய செக்யூரிட்டி கான்வாயில் பயன்படுத்தி வருகின்றார். எனவே, புதிய வெர்ஷன் ஏஎம்ஜி ஜி 63 மாடலையும் அவர் விரைவில் தன்னுடைய கான்வாயில் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டே இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








