இந்த பென்ஸ் காரை வாங்க கூட்டம் குவியப்போகுது! விலை இவ்வளவு கம்மியா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்று தனது சி கிளாஸ் மற்றும் ஜிஎல்சி ஆகிய கார்களை அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார்கள் அறிமுகமாகியுள்ளன. இதற்கு முந்தைய மாடலை விட புதிய அம்சங்கள் பொருத்தப்பட்டு இந்த கார்கள் அறிமுகமாகியுள்ளது. அப்படி என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன? இந்த காரில் புதிதாக என்ன விஷயங்கள் எல்லாம் இருக்கிறது? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் என்றால் நிச்சயம் பெரும் பணக்காரர்களுக்கு பிடித்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சமூகத்தில் பணக்காரர்களுக்கு தனி அந்தஸ்தை கொடுப்பதால் நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் இந்தியாவில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. விற்பனையும் சிறப்பாக இருக்கிறது.

mercedes-benz c-class glc updated

இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது சி-கிளாஸ் மற்றும் ஜிஎல்சி ஆகிய கார்களை இன்று அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மெர்சிடிஸ் பென்ஸ் சி 300 ஏஎம்ஜி லைன் என்ற கார் அறிமுகமாகியுள்ளது. இது ஏற்கனவே விற்பனையான சி 300டி டீசல் இன்ஜின் காருக்கு பதிலாக அறிமுகமாகியுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி 300 ஏஎம்ஜி லைன் காரை பொருத்தவரை ரூபாய் 69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. சி- 200 பெட்ரோல் இன்ஜின் காரை பொருத்தவரை ரூபாய் 61.85 லட்சம் என்ற விலையிலும், சி-220டி டீசல் இன்ஜின் காரை பொறுத்தவரை ரூபாய் 62.85 லட்சம் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

mercedes-benz c-class glc updated

அப்டேட் செய்யப்பட்ட ஜிஎல்சி காரை பொருத்தவரை இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி ஜிஎல்சி 220d 4மேட்டிக் டீசல் இன்ஜின் கார் ரூ76.9 லட்சம் என்ற விலையிலும், ஜிஎல்சி 300 4மேட்டிக் பெட்ரோல் இன்ஜின் கார் ரூ75.9 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகி வருகிறது. இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக அல்லது அருகில் உள்ள பென்ஸ் டீலர்ஷிப் மூலமா புக்கிங் செய்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி 300 ஏஎம்ஜி லைன் காரை பொருத்தவரை முன்பக்கமும் பின்பக்கமும் அக்ரஸிவான பம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோக ஏஎம்ஜி மல்டிஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் நைட் பேக்கேஜ் உடன் விற்பனைக்கு வருகிறது. இது கருப்பு நிற உட்புற கட்டமைப்புடன் மேனுஃபேக்சர் கலர் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.

mercedes-benz c-class glc updated

இந்த காரில் சில தனித்துவமான அம்சங்கள் உள்ளன அதன்படி பர்மாஸ்டர் 3டி சவுண்ட் சிஸ்டம், ஆர்கியூமென்ட்டட் ரியாலிட்டி நேவிகேஷன் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. சி-300 ஏஎம்ஜி லைன் காரின் இன்ஜினை பொறுத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 258 எச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜினுடன் சேர்த்து இன்டர்கேட்டட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த காருக்கு கூடுதலாக 22 எச்பி பவரையும் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் ஓவர் பூஸ்ட் ஆப்ஷனும் இருக்கிறது.

இந்த இன்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முன்பக்க வீல் டிரைவ் காராக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

சி-கிளாஸ் மற்றும் ஜிஎல்சி ஆகிய கார்களில் உள்ள அம்சங்களை பொருத்தவரை ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக 360 டிகிரி கேமரா, 6 பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி சி போர்டுகள், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட், டிஜிட்டல் கீ உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இருக்கிறது. ஜிஎல்சி காரில் கூடுதலாக 9 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

சி200 காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 204எச்பி பவரையும் 300என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சி220டி காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200எச்பி பவரையும் 440என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜினும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜிஎல்சி காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 258 எச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎல்சி 220டி காரை பொறுத்த வரை 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 197 எச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களும் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இது 4 வீல் டிரைவாக 4 மேடிக் சிஸ்டம் மூலம் இணைக்கப்படுகிறது.

இந்த இரண்டு இன்ஜினும் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதுபோக இதில் இன்டகிரேட்டட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது கூடுதலாக 23 எச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு இருக்கிறது. இதனால் இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் காத்திருக்கிறார்கள். இந்த காரின் அறிமுகம் குறித்த செய்தி வெளியானது. முதல் தற்போது புக்கிங் குவிந்து வருகிறது. இதன் விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் நிச்சயம் அதிக அளவில் இதை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 7:00 [IST]
English summary
Mercedes benz c class glc updated more features price details
மேலும்... #mercedes benz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X