இனி பென்ஸ் கார்கள் என்றால் இப்படித்தான் இருக்கும்! பழசை எல்லாம் மறக்க வேண்டியதுதான்!!

பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) வருகிற ஜனவரி 17- 22ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்துக் கொள்ளவுள்ளன. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் (Luxury Car) நிறுவனமான மெர்சிடிஸ் (Mercedes) தனது புதிய தயாரிப்புகளை காட்சிக்கு நிறுத்தவுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திவரும் மெர்சிடிஸ் நிறுவனம் இந்த கண்காட்சியில் சில எலக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

எலக்ட்ரிக் வாகனங்கள், செயல்திறன்மிக்க வாகனங்கள் என ஏகப்பட்ட புதிய வாகனங்கள் கண்காட்சியில் மெர்சிடிஸின் பெவிலியனில் நிறுத்தப்பட உள்ளன. அவ்வாறு, பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் மெர்சிடிஸில் இருந்து உறுதியாக வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 3 கார்களை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

mercedes-benz cla at auto expo

சி.எல்.ஏ கான்செப்ட் (CLA Concept): புதிய மாடுலர் ஆர்சிடெக்சர் (Modular Architecture) பிளாட்ஃபாரத்தில் மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்கிய புதிய கார் கான்செப்ட் தான், சிஎல்ஏ கான்செப்ட் ஆகும். அதாவது, இந்த கான்செப்ட்டின் அடிப்படையில், வரும் ஆண்டுகளில் புதிய மெர்சிடிஸ் கார்கள் உருவாக்கப்படும். இந்த கான்செப்ட்டை பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்த மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

மிகவும் அட்வான்ஸான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த கான்செப்ட்டிற்கு உள்ளே மிகவும் உயர்தரத்திலான மெட்டீரியல்களை மெர்சிடிஸ் பயன்படுத்தி உள்ளது. இந்த கான்செப்ட் அடிப்படையில் பெட்ரோல்/ டீசல் கார்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் மெர்சிடிஸ் கார்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் கார்களில் பின்பக்கத்தில் எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தும் விதத்தில் இந்த கான்செப்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

mercedes-benz cla at auto expo

எலக்ட்ரிக் ஜி-வேகன் (Electric G-Wagon): இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் காராக ஜி-கிளாஸ் விளங்குகிறது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய இந்த வாகனத்தை எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவர மெர்சிடிஸ் தயாராகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், எலக்ட்ரிக் ஜி-வேகனை இந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இந்தியாவில் மெர்சிடிஸ் வெளியீடு செய்தது.

அதனை தொடர்ந்து, வருகிற பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் இந்த எலக்ட்ரிக் மெர்சிடிஸ் வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தோற்றத்தில் ஜி-கிளாஸ் வாகனத்தை அப்படியே உரித்து வைத்தாற் போன்று இருக்கும் இந்த விலையுயர்ந்த எலக்ட்ரிக் வாகனத்தில் 116kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 473கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

mercedes-benz cla at auto expo

மேபக் இ.க்யூ.எஸ்680 (Maybach EQS680): வரவிருக்கும் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் முற்றிலும் கருப்பு நிறத்தில் மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ்680 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அத்துடன், இந்த மேபக் காரின் பின்பக்கத்தில் புதிய ஸ்பாய்லர், கருப்பு நிறத்திலான ரன்னிங் போர்டு உள்ளிட்டவை புதியதாக வழங்கப்பட உள்ளன. கார் மொத்தமும் கருப்பு நிறத்தில் இருக்கும். எந்த அளவிற்கு என்றால், மேபக் பிராண்ட் லோகோ கூட கருப்பு நிறத்தில் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் மெர்சிடிஸ் பெவிலியனில் இந்த 3 கார்கள் மட்டுமின்றி, லாங்-வீல்பேஸ் இ-கிளாஸ் 450 4மேட்டிக், ஏஎம்ஜி எஸ்.எல்55 4மேட்டிக்+ மற்றும் ஏஎம்ஜி எஸ்63 இ பெர்ஃபார்மன்ஸ் உள்ளிட்ட கார்களும் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளன. இதனால், கண்காட்சியில் மெர்சிடிஸின் பெவிலியன் வாகனங்களால் நிரம்பி வழிய போவது உறுதி.

More from DriveSpark

Article Published On: Sunday, December 29, 2024, 15:02 [IST]
English summary
Mercedes benz cla concept will be showcased at bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X