ரூ1.10 கோடி வச்சிருக்கீங்களா? உடனே இந்த காரை வாங்குங்க! இந்திய பணக்காரங்க எல்லாம் இதுக்காக தான் வெயிட்டிங்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்று ரூபாய் 1.10 கோடி என்ற விலையில் இரண்டு புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சிஎல்இ 300 கேப்ரியோலெட் மற்றும் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 என்ற கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் கடந்த மாதம் அறிமுகமான இக்யூஏ மற்றும் இக்யூபி ஆகிய எலெக்ட்ரிக் கார்களை தொடர்ந்து புதிய கார்களாக இந்த இரு கார்களும் அறிமுகமாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இன்று சிஎல்இ 300 கேப்ரியோலெட் மற்றும் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 ஆகிய 2 கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே கார் ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் நிலையில், அதை அப்டேட் செய்துள்ளது. சிஎல்இ 300 கேப்ரியோலெட் காரை பொருத்தவரை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த சி-கிளாஸ் கேப்ரியோலெட் காருக்கு மாற்றாக சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமாகி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

AMG GLC 43 Coupe Launched

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்சி காரைப் பொறுத்தவரை இரண்டு டோர் கொண்ட காராக விற்பனையாகி வருகிறது. இது கூபே மற்றும் கன்வெர்டபிள் ஆகிய இரண்டு விதமான வேரியண்ட்களில் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஏற்கனவே வெளிநாட்டின் விற்பனையாகி வந்த சி-கிளாஸ் கேப்ரியோலெட் என்ற காருக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது. இந்நிலையில் சிஎல்இ 300 கேப்ரியோலெட் கார் ஏஎம்ஜி லைனில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை 1.10 கோடி ஆகும்.

இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை முந்தைய சி-கிளாஸ் செடான் காரில் உள்ள அதே மாடல் இந்த காரிலும் பின்பற்றப்பட்டுள்ளது. முன்பக்கம் ஷார்ட் நோஸ் கொண்ட வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சி-கிளாஸ் காரில் உள்ள அதே ஹெட்லைட் செட்டப் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. டிஆர்எல் மட்டும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

AMG GLC 43 Coupe Launched

இந்த காரில் 19 இன்ச் ஏஎம்ஜி அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பகுதியை பொருத்தவரை இரண்டு தனியான டெயில் லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ரூப் பகுதி சிவப்பு அல்லது கருப்பு நிற ஷேடில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை தற்போது உள்ள சி-கிளாஸ் காரில் இருக்கும் அதே செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்பகுதியில் 11.9 இன்ச் கொண்ட சென்ட்ரல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் ஏஎம்ஜி வெண்டிலேட்டட் ஸ்போர்ட்ஸ் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்த காருக்கு நல்ல சொகுசு வசதியை வழங்குகிறது. அதேநேரம் ஸ்போர்ட்டியான லுக்கையும் கொடுக்கிறது.

AMG GLC 43 Coupe Launched

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2.0லிட்டர் போர் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 252 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.6 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சம் 250 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 4 மேட்டிக் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரைப் பொறுத்தவரை புதிய தலைமுறை காராக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏஎம்ஜி 43 செடான் காரில் செய்யப்பட்டது போல இதிலும் பழைய வி6 4 சிலிண்டர் இன்ஜின் நீக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை ஏஎம்ஜி காருக்கு உள்ள தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் கிரில் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் முன்பக்கம் பெரிய ஏர் இன்லெட்டுகள் உள்ளது. இதுபோக வீல் ஆர்ச்கள் பாடி கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 20 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு கூபே கார் என்பதால் இதன் ரூப் லைன் பின்பக்கம் ஸ்லோப்பாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படியே கீழே இறங்கி ரூஃப் ஸ்பாய்லருடன் இது இணைகிறது.

இந்த காரின் உட்பக்கம் சாதாரண ஜிஎல்சி காரில் உள்ள அதே அப்டேட் தான் செய்யப்பட்டுள்ளது. 11.9 இன்ச் கொண்ட போர்டபிள் ஸ்டைல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பக்கம் முழுவதும் கருப்பு நிறம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தையல்கள் எல்லாம் சிவப்பு நிற நூல்கள் கொண்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் கான்ட்ராஸ்ட்டான லுக் கிடைக்கிறது.

இந்த காரின் டேஷ்போர்டு கார்பன் பைபர் கொண்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் ஏஎம்ஜி ஸ்டேரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. தனித்துவ அம்சமாக இருக்கிறது. இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 415 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் பவர் 12.8 பிஎச்பி திறன் வரை அதிகமாக இருக்கிறது. இந்த இன்ஜின் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த காஸ்ட்லியான கார் வெளிநாட்டு தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வருவதால் அதிக விலையில் விற்பனையாகி வருகிறது. இருந்தாலும் இந்த காரை வாங்க பணக்காரர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்த காரின் விற்பனை எண்ணிக்கை பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 17:00 [IST]
English summary
Mercedes benz cle 300 cabriolet amg glc 43 coupe launched details
மேலும்... #mercedes benz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X