இந்த ஸ்கிரீனை வேண்டாம்னு செல்லிட்டா 5.4 லட்ச ரூபாவ கம்மி பண்ணிருவாங்க போலையே!

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் சொகுசு கார் மாடல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எல்டபிள்யூபி (Mercedes-Benz E-Class LWB) ஒன்றாகும். இது ஓர் சொகுசு செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை சமீபத்திலேயே பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆறாம் தலைமுறை வெர்ஷனே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அறிமுகமாக ரூ. 78.5 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த நிலையிலேயே இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்னும் விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 5.4 லட்சம் வரையில் குறைவான விலையிலேயே இ-கிளாஸ் எல்டபிள்யூபி சொகுசு காரை விற்பனைக்குக் களமிறக்க பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

Mercedes-benz e-class lwb without superscreen

எனவே சில முக்கியமான அம்சங்களை இந்த கார் இழக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த எல்டபிள்யூபி காரில் வழங்கும் ஹைப்பர் திரையை நீக்கியே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், இந்த திரைக்கு பதிலாக வழக்கமான திரை செட்-அப்பையே இ-கிளாஸ் எல்டபிள்யூபி-இன் புதிய தேர்வில் பென்ஸ் வழங்க இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் வாயிலாக நிறுவனம் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் ஹைப்பர் திரையின் மதிப்பு ரூ. 5 லட்சத்திற்கும் அதிகம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Mercedes-benz e-class lwb without

எனவே இந்த திரையை தவிர்க்கும்பட்சத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எல்டபிள்யூபி சொகுசு காரை ரூ. 5 லட்சம் வரை குறைவான விலையில் வாங்கிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மூன்று திரைகளையும் ஒரே திரையாகக் கொண்டிருப்பதே ஹைப்பர் ஸ்கிரீன் ஆகும். இந்த திரையின் ஒரு பகுதி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக செயல்படும்.

மேலும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் திரையாகவும். மூன்றாவது பயணிகளுக்கான திரையாகும் செயல்படும். இந்த நிலையிலேயே மூன்றாவதாக வழங்கப்படும் பயணிகளுக்கான திரை இல்லாமல், அதாவது சூப்பர் ஸ்கிரீன் அம்சம் நீக்கப்பட்டு புதிய விலை குறைவான தேர்வை பென்ஸ் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இ220டி மற்றும் இ200 என இரண்டு ஆப்ஷன்களிலும் ஹைப்பர் திரை இல்லாத தேர்வை விற்பனைக்கு வழங்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த அம்சம் இல்லா இ220டி ரூ. 5.40 லட்சம் வரை குறைவான விலையிலும், இ200 ரூ. 5.25 லட்ச் வரையிலான குறைவான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இன்றைய நிலவரப்படி ஹைப்பர் ஸ்கிரீன் கொண்ட இந்த கார் மாடல் ரூ. 81.50 லட்சம் மற்றும் 78.50 லட்சம் ரூபாய் ஆகிய விலைகளிலேயே விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஹைப்பர் ஸ்கிரீன் இல்லா இ-கிளாஸ் எல்டபிள்யூபி சொகுசு கார் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. விரைவிலேயே இதுகுறித்த தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு இன்னும் இரட்டிப்பாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மடாலாக இ-கிளாஸ் எல்டபிள்யூபி காட்சியளிக்கின்றது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பை இன்னும் அதிகப்படுத்தும் நோக்கிலேயே பென்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான தேர்வை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தற்போது களமிறங்கி இருக்கின்றது.

குறிப்பு: இந்த தகவல் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றது. இ-கிளாஸ் எல்டபிள்யூ காரில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சமே இதுவாகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால் இந்த அம்சத்தை நீக்குவதற்கான திட்டம் எங்களிடம் இல்லை என அது திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2024, 14:44 [IST]
English summary
Mercedes benz e class lwb without superscreen setup launching soon in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+