இவ்வளவு தள்ளுபடிய உங்க வாழ்நாள்ல பார்க்க முடியாது! ஒரு காருக்கு ரூ20 லட்சம் தள்ளுபடி!

மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது தனது என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலையை ரூபாய் 20 லட்சம் வரை குறைத்துள்ளது. மேலும் இந்த காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. இவ்வளவு அதிகமான பணம் எப்படி குறைக்கப்பட்டது? ஏற்கனவே இந்த காரை வாங்கிய வாடிக்கையாளர்களை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் வாகனங்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டியும் அதே நேரம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவும் அதன் விலையை ரூபாய் 20 லட்சம் வரை குறைந்துள்ளது.

mercedes Benz eqe

எனனது ரூ 20 லட்சம் விலை குறைக்கப்பட்டுள்ளதா? காரின் விலை தான் என்ன என்று நீங்கள் கேட்கலாம்? மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது இகியூஇ என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும்போது, இது ரூ1.41 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது இது முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்திய மார்க்கெட்டில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அந்நிறுவனம் இந்த காரை மக்கள் மத்தியில் பிரபலமான காராக மாற்ற வேண்டும் என்பதற்காக இதன் விலையை குறைக்க திட்டமிட்டது. அதற்காக வெளிநாட்டிலிருந்து தனித்தனி உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் இந்த கார் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதனால் இந்த காரின் விலையை ரூபாய் 20 லட்சம் வரை அந்நிறுவனம் குறைத்துள்ளது.

mercedes Benz eqe

தற்போது மெர்சிடீஸ் நிறுவனத்தின் இகியூஇ எலெக்ட்ரிக் எஸ்யூவி ரூ1.19 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலை வித்தியாசத்தை கொண்டு வருவதற்கு மிக முக்கியமான காரணம் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் எப்பொழுதும் தனது ஒரு காருக்கும் அதே போன்று மற்றொரு கார்க்கும் இடையே இருக்கும் விலை வித்தியாசத்தை வைத்திருக்கும் இந்த காருக்கும் இக்யூஎஸ் என்ற காருக்கும் அதிக விலை வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை செய்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே இந்த மெர்சிடீஸ் பென்ஸ் என்ற காரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை வவுச்சர்களை வழங்கி உள்ளது. இதை வைத்து அவர்கள் மெர்சிடீஸ் பென்ஸ் தயாரிப்புகளை அடுத்த மூன்று ஆண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். கஸ்டமர்கள் நம்பிக்கையை பெறவும் ஏற்கனவே இந்த காரை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடையாமல் இருப்பதற்காகவும் இப்படியான வவுச்சர்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

mercedes Benz eqe

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த கார் 3வது எலெக்ட்ரிக் காராகவும் ஏற்கனவே இகியூஏ என்ற எஸ்யூவி கார் எலெக்ட்ரிக் காராக விற்பனையாகி வருகிறது. இருப்பதிலேயே டாப் எண்ட் இவி காரான இக்யூஎஸ் என்ற எஸ்யூவி கார் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இக்யூஏ மற்றும் இக்யூஎஸ் ஆகிய கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 122 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்த கார் 544 எச்பி பவரையும் 858 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.7 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் போட்டால் 809 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளதன் மூலம் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான விலை கொடுத்து காரை வாங்கும் வாடிக்கையாளர்களில் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவு தான். அதனால் மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த தயாரிப்புகளை வைத்திருந்தால் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் இந்த காரின் விலையை குறைத்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விற்பனையை அதிகரிக்க ஒரு சின்ன ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 13:11 [IST]
English summary
Mercedes benz eqe suv price cut 20 lakh loyalty vouchers
மேலும்... #mercedes benz #india #diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X