ஒருமுறை சார்ஜ் பண்ணா 800கிமீ பயணம்... 7 பேருடன் குடும்பமாக பயணிக்க ஏற்ற கார்!! விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புதிய இ.க்யூ.எஸ் (EQS) எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் 6வது மெர்சிடிஸ் எலக்ட்ரிக் கார் ஆகும். ஒரேயொரு இக்யூஎஸ் 580 4மேட்டிக் வேரியண்ட்டில் மட்டுமே இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இக்யூஎஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.41 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பென்ஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களையும், இந்த எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் புது, புது எலக்ட்ரிக் கார்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ள நிறுவனங்களுள் ஒன்று, மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகும். குறுகிய காலத்தில் 6வது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இருப்பதில் இருந்து, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் மெர்சிடிஸ் நிறுவனம் எந்த அளவிற்கு முனைப்பு காட்டுகிறது என்பதை அறியலாம். சமீபத்தில், இந்த செப்டம்பர் மாத துவக்கத்தில், மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ் 680 என்கிற எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

mercedes-benz eqs580 4matic launched

அதனை தொடர்ந்து தற்போது, இக்யூஎஸ் 580 4மேட்டிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் என்பதை தவிர்த்து, இந்த புதிய காருக்கும் மேபக் இக்யூஎஸ் 680 காருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில், இக்யூஎஸ்580 காரை விட மேபக் இக்யூஎஸ்680 ஆனது விலைமிக்க எலக்ட்ரிக் கார் ஆகும். புதிய இக்யூஎஸ்580 4மேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.41 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைவிட குறைந்த விலையில் இக்யூஇ என்கிற எலக்ட்ரிக் காரையும் இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. புதிய இக்யூஎஸ்580 4மேட்டிக் காரின் முன்பக்கத்தில் கருப்பு நிறத்தில் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. இது முன்பக்க பம்பர் வரையில் பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கு க்ரில் தேவையில்லை. ஆதலால், இந்த கிரில் பகுதி ஆனது சும்மா அழகுக்காக மட்டுமே ஆகும்.

mercedes-benz eqs580 4matic launched

இன்றைய கால மாடர்ன் கார்களின் முன்பக்க ஹெட்லைட்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் விதத்தில் லைட் பார் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த புதிய மெர்சிடிஸ் எலக்ட்ரிக் காரிலும் எல்இடி ஹெட்லைட்களை இணைக்கும் விதத்தில் எல்இடி லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்களை முழு-அகல லைட் பார் இணைக்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மேபக் இக்யூஎஸ்680 எலக்ட்ரிக் காரில் வெளிப்பக்கத்தில் நிறைய இடங்களில் க்ரோம் ஃபினிஷிங் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய இக்யூஎஸ்580 4மேட்டிக் காரில் க்ரோம் மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பரில் சற்று அதிகமாக க்ரோம் எலிமெண்ட்களை காண முடிகிறது. 21-இன்ச்சில் ஏஎம்ஜி அலாய் சக்கரங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. காருக்குள் டேஸ்போர்டில் ஹைப்பர்ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது.

mercedes-benz eqs580 4matic launched

இதன்படி, டேஸ்போர்டில் மொத்தம் 3 திரைகள் இடம்பெற்றுள்ளன. 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 17.7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3-இன்ச்சில் முன் இருக்கை பயணிக்கான பொழுதுப்போக்கு திரை என்பன அந்த 3 திரைகள் ஆகும். இவை மட்டுமின்றி, பின் இருக்கை பயணிக்களுக்காகவும் 11.6 இன்ச்சில் இரு பொழுதுப்போக்கு திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

5-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 15-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், லெவல்-2 அடாஸ், 9 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை இந்த காரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். இந்த பென்ஸ் எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள 122kWh திறன் கொண்ட பேட்டரி மற்றும் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் அதிகப்பட்சமாக 544 எச்பி மற்றும் 858 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

mercedes-benz eqs580 4matic launched

0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 809கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ARAI சான்றளித்துள்ளது. 200 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் மூலமாக காரின் பேட்டரியை வெறும் 31 நிமிடங்களில் 10% முதல் 80% சார்ஜை நிரப்பிவிடலாம். அதுவே, சாதாரணமான 7.4 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 18.5 மணிநேரங்கள் தேவைப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய இக்யூஎஸ்580 4மேட்டிக் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போகும் 2வது மெர்சிடிஸ் லக்ட்ரிக் கார் ஆகும். இதன் காரணமாகவே, செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் காராக இருப்பினும், விலையை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தால் குறைவாக நிர்ணயிக்க முடிந்துள்ளது. புக் செய்பவர்களுக்கு இந்த காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற தீபாவளி பண்டிகை காலத்தின்போது துவங்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2024, 15:33 [IST]
English summary
Mercedes benz eqs 580 4matic launched price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X