என்னங்க இந்த பென்ஸ் நிறுவனம் கப்பலுக்கு இணையா இந்த காரை ரெடி பண்ணியிருக்கு! இக்யூஎஸ் எஸ்யூவி ரிவியூ விடியோ!
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் இந்தியாவில் பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் சமீபத்திய அறிமுகமான இக்யூஎஸ் (EQS) எஸ்யூவி எலெக்ட்ரிக் ரக கார் மாடலை சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இது ஓர் மூன்று வரிசை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் என்பது கவனிக்கத்தகுந்தது. ரூ.1.41 கோடி எனும் எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இத்தகைய உயர்ந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சொகுசு காரையே ஓட்டி பார்த்து அக்கார் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்துக் கொண்டோம்.
அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள், இயக்க அனுபவம் எப்படி இருக்கும் என்பது போன்ற முக்கிய தகவல்களையே நாங்கள் அறிந்துக் கொண்டோம். இது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் வீடியோவாக வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரில் 122kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே வழங்கி இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 809கிமீ ரேஞ்சை வழங்கும். இது அராய் சான்றளித்த ரேஞ்ச் விபரம் ஆகும். இந்த பேட்டரி பேக்கை 200kW திறன் கொண்ட டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாகவும் சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80சதவீத சார்ஜை வெறும் 31நிமிடங்களில் ஏற்றிவிட முடியும்.

அதேவேளையில், 22kW ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப், அனைத்து வீல்களும் இயங்கும் திறன் ஆகியவற்றையும் இந்த சொகுசு கார் கொண்டிருக்கின்றது. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 536பிஎச்பி மற்றும் 858என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210கிமீ ஆகும். மேலும், வெறும் 4.7செகண்டுகளிலேயே இந்த கார் 0-100கிமீ வேகத்தை எட்டிவிடும்.


Click it and Unblock the Notifications








