பணக்காரங்க மட்டும் தான் இந்த காரை வாங்க முடியும்! நாம எல்லாம் இதை பார்த்தாலே பெரிய விஷயம் தான்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ 1.32 கோடி என்ற விலையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜிஎல்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி காராகவும் இந்த கார் சர்வதேச அளவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமான நிலையில் தற்போது தான் இந்தியாவிற்கு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்களை சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பல கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக எண்ணிக்கையிலான விற்பனையை பெற்று வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசும் இருக்கிறது.

Mercedes-Benz GLS facelift launch

இந்நிலையில் சர்வதேச அரங்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த 20203-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஜிஎல்எஸ் காரை ஃபேஸ்லிப்ட் செய்து அறிமுகப்படுத்தியது இந்த காரை தற்போது தான் இந்நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வந்து இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ1.32 கோடி என்ற விலையில் இந்த கார் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் வேரியன்டை பொருத்தவரை இரண்டு விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. ஜிஎல்எஸ் 450 மற்றும் ஜிஎல்எஸ் 450டி ஆகிய வேரியன்ட் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு வேரியன்டிற்கு இன்ஜின் மட்டும் தான் வித்தியாசம்.

Mercedes-Benz GLS facelift launch

இதில் ஜிஎல்எஸ் 450 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராகும். ஜிஎல்எஸ் 450 டி என்பது டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராகும். இதில் பெட்ரோல் வேரியன்ட் கார் ரூபாய் 1.32 கோடி என்ற விலையிலும் டீசல் வேரியன்ட் கார் ரூ 1.37 கோடி என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. தற்போது விற்பனையாகி வரும் ஜிஎல்எஸ் மாடலில் விட சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக நீள வாக்கிலான மாற்றி அமைக்கப்பட்ட ரேடியேட்டர் கிரில் சில்வர் ஃபினிஷுடன் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க்க மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான ஒரு விஷயமாக இருக்கிறது.

Mercedes-Benz GLS facelift launch

இந்த காரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவைதான் இந்த காரின் வெளிப்புற மாற்றங்களாக உள்ளன. பெரும்பாலும் இதற்கு முந்தைய வெர்ஷன் காரில் இருந்த அதே லுக் தான் இந்த காரில் இருக்கிறது. சற்று புதுமையாக தெரிய வேண்டும் என்பதற்காக சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை அப்டேட் செய்யப்பட்ட எம்பக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது மத்தியில் பொருத்தப்பட்டுள்ள டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் டிஸ்ப்ளே உடனும் இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல்களை பெற முடியும்.

Mercedes-Benz GLS facelift launch

இதுபோக 13 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மாஸ்டர் 590 வாட்ஸ் ஆடியோ சிஸ்டம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், சவுண்ட் பெர்சனலைசேஷன், புதிய அப்ஹோல்சரி ஆப்ஷன்கள் ஆகியன உள்ளன. இந்த காரின் உட்புறத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் ரசிக்கும் வகையில் பல்வேறு விதமான மாற்றங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.

பயணிகள் பாதுகாப்பு: இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களாக பார்க்கிங் பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதில் லோ ஸ்பீடு 360 டிகிரி கேமரா, ஆஃப் ரோடு மோடு மற்றும் பல்வேறு விதமான கேமரா வியூ பாயிண்ட்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக மல்டிபிள் ஏர் பேக் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அடாஸ் தொழில்நுட்பம் ஆகிய இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

இந்த மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிப்ட் கார் மார்க்கெட்டில் ஆடி கியூ 8, பிஎம்டபிள்யூ எக்ஸ் 7, லேண்ட்ரோவர் டிஸ்கவரி, வால்வோ எக்ஸ்சி 90 ஆகிய சொகுசு கார் செக்மெண்டிற்க்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வருகிறது. மார்க்கெட்டில் இந்த காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் என்பது பணக்காரர்கள் அதிகம் விரும்பும் காராக இருக்கிறது. இந்தியாவில் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இதனால் இதன் ஃபேஸ்லிஃப்ட் வேரியன்டை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்த காரின் விலை அதிகமாக இருந்தாலும் இதில் உள்ள அம்சங்கள் காரணமாக பணக்காரர்கள் இந்த காரை நிச்சயம் அதிகமாக தேர்வு செய்வார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 9, 2024, 16:28 [IST]
English summary
Mercedes benz gls facelift launch india 1 32 crore
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X