அம்பானியே இந்த கார்களை வாங்க தயங்குவாரு! ரேட்டை கேட்டா ஒரு செகண்ட் மூச்சே நின்னு போயிடும்!
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி 63 பெர்ஃபார்மென்ஸ் எடிஷன் ஆகிய இரண்டு கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எடிசன் கார் 590 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் ஜிஎல்எஸ் 600 என்ற எஸ்யூவி கார் சொகுசாகவும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காராகவும் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட இரண்டு கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மெர்சிடிஸ் மேபேக் என்ற காரும் மெர்சிடிஸ் ஏஎம்ஜிஎஸ் 63இ பெர்ஃபார்மென்ஸ் எடிசன் 1 செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பென்ஸ் கார் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த கார்களின் விலை அதிகமாகவும் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை ஒவ்வொன்றாக காண்போம்.

மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 4மேடிக் எஸ்யூவி காரைப் பொறுத்தவரை அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. இந்த காரில் உள்ள வடிவமைப்பு முதல் இதன் டிசைன் வரை சொகுசு அம்சங்கள் மற்றும் லக்சரியை வெளிகாட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது எஸ்யூவி செகண்ட் மிகச் சிறந்த காராக இருக்கிறது.
அடுத்ததாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 பெர்ஃபார்மன்ஸ் எடிசன் 1 செடான் காரை பொறுத்தவரை சொகுசு வசதி நிறைந்ததாகவும், அதே நேரம் அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்ட காராகவும், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட காராகவும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் காராகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களின் பவரை பொருத்தவரை மெர்சிடிஸ் ஏஎம்ஜிஎஸ்63 பெர்ஃபார்மன்ஸ் எடிஷன் 1 செடான் காரில் 4.0 லிட்டர் வி8 உள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் மொத்தமாக 590 கிலோ வாட் பவர் அதாவது 802 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1430 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி எடிசன் 1 காரைப் பொறுத்தவரை லிமிடெட் எடிஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இந்த காரில் ஏகப்பட்ட தனித்துவமான அம்சங்கள் உள்ளது. முக்கியமாக இந்த காரின் நிறம் என்பது வித்தியாசமாக மேனுஃபேக் அஃப்பில் கிரை என்ற நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில்21 இன்ச் கொண்ட ஏஎம்ஜி 4 வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. சீட் கவர்களிலும் தனித்துவமாக ஏஎம்ஜிரக லெதர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தையல்கள் சிவப்புநிற நூல்கள் கொண்டு வைக்கப்பட்டுள்ளன. ஏஎம்ஜி எடிசன்1 காரின் உட்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல் எல்லாம் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டதாக உள்ளன. சீட்டுகள் எல்லாம் கருப்பு நிற லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்பகுதி முழுவதும் கார்பன் பைபர் கொண்டு சிவப்புநிற ஆக்சிடென்ட்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மே பேக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் எஸ்யூவி காரை பொருத்தவரை அதன் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பாக இருக்கிறது. மேபேக் காரில் உள்ள கிரில் போலவே இந்த காரிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதியில் சிறப்பான தனிநபர் சீட்டிங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது காரில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம் சிறப்பானதாக மேம்படுத்ததாக இருக்கிறது. சொகுசு மற்றும் லக்சரி ஆகியவற்றுக்கு பெயர் போனதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜிஎல்எஸ் 600 காரின் இன்ஜினை பொறுத்தவரை எம்177 4.0 லிட்டர் விஐடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 410 கிலோ வாட் பவரையும் 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்குள்ளே இன்டகிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவைப்படும் நேரத்தில் கூடுதல் பூஸ்ட்டை வழங்கும் வகையில் இது செயல்படும்.
இந்த காரில் ஏகப்பட்ட அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் கஸ்டமைசபில் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக இதில் எம்பக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக காட் 360 புரொடக்சன் சிஸ்டம் இ ஆக்டிவ் பாடி கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 4மேட்டிக் காரை பொறுத்தவரை சொகுசு மற்றும் பெர்ஃபார்மன்ஸ் நிறைந்த காராக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார்களில் விலையை பொறுத்தவரை ஏஎம்ஜி 63 இ பெர்ஃபார்மன்ஸ் காரை பொறுத்தவரை ரூபாய் 3.3 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகமாகிறது. எடிசன் ஒன் செடான் காரை பொறுத்தவரை ரூபாய் 3.8 கோடி என்ற நிலையில் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகமாகிறது. இந்த கார்கள் வெளிநாடுகளில் கட்டமைக்கப்பட்டு முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் அதிக விலையில் இருக்கிறது.
டிரைஸ்பார்க் கருத்து: மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ரூபாய் 3 கோடிக்கும் அதிகமான விலையில் இந்தியாவில் வாகனங்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்களின் விற்பனை குறைவாக தான் இருக்கும். பெரும் பணக்காரர்களை இந்த வாகனங்களை வாங்க யோசிப்பார்கள். ஓரிரு வாகனங்கள் இந்தியாவில் விற்பனையானாலே பெரிய விஷயமாக தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications









