கப்பல்ல மிதக்குற அனுபவம் கிடைக்கும்.. இந்தியால இந்த பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்திருச்சா!

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் சொகுசு கப்பல் மாதிரியான புதிய லக்சூரி கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மேபேக் ஜிஎல்எஸ் 600 (Maybach GLS 600) மாடலின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அதாவது, மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போதைய சூழலுக்கு ஏற்பவாறு அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட சொகுசு கார் மடாலுக்கு இந்தியாவில் அறிமுக விலையாக ரூ. 3.35 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Mercedes benz maybach gls 600

புதுப்பித்தலின்கீழ் இந்த கார் மாடலின் வெளி மற்றும் உட்பக்கங்களில் பல்வேறு மாற்றங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் செய்து இருக்கின்றது. அந்தவகையில் வெளிப்புறத்தில் புதிய க்ரில், புத்தம் புதிய பம்பர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றம் கவனத்தை ஈர்க்கக் கூடிய மாற்றங்களில் ஒன்றாகும்.

இத்துடன், காற்றை உள்கடத்தும் அழகிய துளைகள், அழகான கண்களைப் போன்ற தோற்றமுடைய ஹெட்லைட் ஆகியவையும் இந்த காரின் முன் பக்கத்திற்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இந்த காரின் பின் பக்கத்திற்கும் அழகு சேர்க்கும் விதமான பணிகளை மெர்சிடிஸ் பென்ஸ் செய்திருக்கின்றது.

அந்தவகையில், மேபேக்கின் பிரத்யேக புகை வெளியேற்றும் குழாய்கள் (எக்சாஸ்ட் பைப்), புதிய எல்இடி லைட் ஆகியவை மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரின் பின்பக்கத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரை மூன்று விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். கருப்பு, போலார் ஒயிட் மற்றும் சில்வர் மெட்டாலிக் ஆகியவையே அவை ஆகும்.

இத்துடன், டூயல் டோன் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதேபோல், வீலிலும் சில ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 22 அங்குலம் மற்றும் 23 அங்குல ஆகிய ஆப்ஷன்களே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 இல் வழங்கப்படுகின்றது. இந்த காரின் உட்பக்கத்திலும் பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், புதிய ஸ்டியரிங் வீல், அட்டகாசமான மற்றும் ஸ்டைலான ஏசி துவாரங்கள், புதிய தலைமுறை எம்பியூஎக்ஸ் மென்பொருள், அப்டேட் செய்யப்பட்ட டெலிமேட்டிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மசாஜ் மற்றும் அதிக காற்றோட்டத்தை உறுதி செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், 43.5 டிகிரி சாயும் திறனுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், கைகளுக்கு ஓய்வளிக்கும் மேடை, 11.6 அங்குல திரை, 590 வாட் பர்மெஸ்டர் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், மேபேக் ஆம்பியன்ட் லைட், லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகிய அம்சங்களும் புதிய பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, வீட்டுக்குள் இருக்கும் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த காரில் சிறிய குளிர்சாதன பெட்டி, ஆங்காங்க மரத்தாலான பேனல்கள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை புதிய மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு கார் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 557 எச்பி பவரையும், 770 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 48 வோல்ட் திறன் கொண்ட ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இது தனியாக 22 எச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

கியர்பாக்ஸை பொருத்த வரை 9ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கே வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 4.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட சொகுசு கப்பல் போன்ற லக்சூரி காரையே பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே மெர்சிடிஸ் பென்ஸ் அதன் புதுப்பிக்கப்பட்ட மேபேக் ஜிஎல்எஸ் 600 மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 20:08 [IST]
English summary
Mercedes benz launched facelift maybach gls 600 in india at rs 3 35 crore
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+