கோடி கோடியா லாபம் எடுக்கணும்னு நினைச்சா மட்டும் போதாது.. காரையும் பிரச்னை இல்லாம தயாரிக்க கத்துக்கணும்!!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் கிளாஸ் (Mercedes Benz Maybach S-Class)-ம் ஒன்றாகும். இந்திய செல்வந்தர்களின் மிகவும் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. சொல்லப்போனால் இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் பலர் தேடி தேடி சென்று வாங்கிய கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. அந்த அளவிற்கு ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய கார் மாடலாகவே மேபேக் எஸ் கிளாஸ் காட்சியளிக்கின்றது. இந்த காரிலேயே முக்கிய பாகம் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த கோளாறை சரி செய்யும் பொருட்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவல் மெர்சிடிஸ் பென்ஸ் கார் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த காரில் பயன்படுத்தப்பட்ட இசியூ மென்பொருளிலேயே சிக்கல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது.

பல கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்படும் கார் மாடலில் இப்படி ஒரு பிரச்னையா என்றே பலரையும் இந்த நிகழ்வு நினைக்கச் செய்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் கிளாஸ் கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே இந்தியாவில் 2 கோடி ரூபாயை நெருங்கும்.
இத்தகைய அதீத விலையைக் கொண்டிருப்பதால் அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் மட்டுமே நுகரக் கூடிய கார் மாடலாக மேபேக் எஸ் கிளாஸ் காட்சியளிக்கின்றது. ஆகையால், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் இவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்தமாக 386 யூனிட்டுகளுக்கு ரீ-கால் செய்யப்பட்டு இருக்கின்றது.

இவை அனைத்திலும் விரைவில் இசியூ மென்பொருள் (ECU Software) பிரச்னை செய்யப்படும் என நம்பப்படுகின்றது. 29 ஏப்ரல் 2021 மற்றும் 27 ஜனவரி 2024 ஆகிய காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களிலேயே பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இசியூ மென்பொருளில் ஏற்பட்டு இருக்கும் பழுதினால் அளவு கடந்த வெப்ப நிலை எக்சாஸ்ட்டில் வெளியேறும் சூழல் உருவாகி இருக்கின்றது.
இதுமட்டுமல்ல, எஞ்சினைச் சுற்றியிருக்கும் வயரிங் வேலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் மற்றும் தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளிட்டவை ஏற்படக் கூடும் கண்டறியப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவசரகதியாக தற்போது குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்ப்டட மெபேக் எஸ் கிளாஸ் கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவில் எஸ் கிளாஸ் சொகுசு கார் ரூ. 1.77 கோடி எனும் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 3.44 கோடி ஆகும். இந்த அளவு அதிக விலையைக் கொண்டிருப்பதனாலேயே நாட்டில் இந்த காரின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருக்கின்றது.
ஆடம்பர அம்சங்கள் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கடல்போல் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலாகவே மேபேக் எஸ் கிளாஸ் உள்ளது. பானங்களை குளிர்ச்சி வைத்துக் கொள்ள குட்டி குளிர்சாதனக் கருவி, மிகவும் சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள் மற்றும் பள்ளம் - மேடுகளில் பயணித்தாலும் அசௌகரியமான டிராவல் அனுபவத்தை வழங்காத வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கார் மாடலாக இந்த பென்ஸ மேபேக் எஸ் கிளாஸ் காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே கொஞ்சம் கவனக் குறைவுடன் நிறுவனம் தயாரித்து இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விரைவில் இதற்கு கட்டணமில்லா தீர்வையே பென்ஸ் வழங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








