ஜேம்ஸ் பாண்ட் படத்துலகூட இவ்ளோ அழகான கார பாத்திருக்க மாட்டீங்க.. மும்பையில் காட்சி தந்த புதுமுக பென்ஸ் கார்!

உலக புகழ்பெற்ற சொகுசு உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) அதன் கான்செப்ட் (Concept) மாடலை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. ஏஎம்ஜி விஷன் கிரான் டூரிஸ்மோ (Mercedes Benz AMG Vision Gran Turismo) எனும் கான்செப்ட் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது.

மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானிக்கு சொந்தமான கல்சுரல் சென்டரிலேயே (Nita Mukesh Ambani Cultural Centre) இந்த காரை அது காட்சிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்யும் மூன்றாவது கான்செப்ட் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mercedes amg gt 6 concept side design

முன்னதாக விஷன் மேபேக்6 (Vision Maybach 6) மற்றும் இக்யூஜி (Concept EQG) ஆகிய கான்செப்ட் மாடல்களையே மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்தே, தற்போது அதி நவீன வசதிகள் தாங்கிய ஏஎம்ஜி ஜி6 கான்செப்டை அது காட்சிப்படுத்தி இருக்கின்றது.

இதனை வருகின்ற மே மாதம் வரை நீதா முகேஷ் அம்பானி கல்சூரல் மையத்தில் காட்சிப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது. காரை பார்ப்பது மட்டுமல்ல அங்கு ஓர் க்யூஆர் கோடு வழங்கப்பட்டு இருக்கும் இதை ஸ்மார்ட்ஃபோன் வாயிலாக ஸ்கேன் செய்யும்பட்சத்தில் கார் பற்றிய இன்னும் பல தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

Mercedes amg gt 6 concept

ஏஎம்ஜி ஜிடி6 ஓர் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். லுக் மற்றும் சிறப்பம்சம் என அனைத்திலும் இந்த கார் கை தேர்ந்ததாகக் காட்சியளிக்கின்றது. மிக சிறந்த வடிவமைப்பை இதில் பயன்படுத்தி இருக்கின்றது மெர்சிடிஸ் பென்ஸ். இத்துடன், இன்டலிஜென்டான உயர் ரக தொழில்நுட்பங்களையும் இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது.

மிக முக்கியமாக 585 எச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் மின்சார மோட்டாரை இதில் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 6 கான்செப்ட் மிகவும் நீளமான பான்னெட்டையும், அதேவேளையில் மிகவும் குறுகலான பின் பக்கத்தையும் கொண்டிருக்கின்றது.

Mercedes amg gt 6 concept rear

இதன் நீளமான பான்னெட்டிலேயே மின்சார இயக்கத்திற்கான அனைத்து கூறுகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது, பேட்டரி பேக் மற்றும் பல முக்கிய கூறுகளே அதில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், இந்த தோற்றத்தினாலேயே அதற்கு காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் திறன் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு நீர் துளி விழுந்தாலும்கூட இந்த காரின் தங்காத அளவிற்கு அதன் தோற்றம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மிகவும் தாழ்வான அமைப்பை கார் கொண்டிருப்பதால், அந்த காரை இயக்கும்போது தாரையோடு தரையாக அமர்ந்துக் கொண்டு பயணிக்கும் அனுபவம் இதில் கிடைக்கும். மேலும், இந்த காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு எடுப்பாகவே லைட் மற்றும் வீல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Mercedes amg gt 6 concept wheel

குறிப்பாக, இதன் ரேடியேட்டர் கிரில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை அதற்கு வழங்குகின்றது. இந்த காரின் பெரும்பாலான டிசைன் அம்சங்கள் 300எஸ்எல் ரேசிங் காரை பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. இது 1952 மாடல் ரேசிங் கார் ஆகும். இந்த காரை எப்போது உற்பத்தி செய்யும், எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இதன் வருகையை நோக்கி இப்போதே உலக ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகள் பலர் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அந்நிறுவனம் தன்னுடைய கான்செப்ட் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்து அசத்தி இருக்கின்றது. இதன் வாயிலாக பலரின் கவனத்தையும் அது தற்போது திசையிருக்கின்றது என கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2024, 23:37 [IST]
English summary
Mercedes benz showcased amg gt 6 concept at nmacc
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X