குறைந்த இஎம்ஐ-ல் இனி பென்ஸ் காரை வாங்கலாம்! வீட்டுக்கு ஒரு காரை வாங்கிபோட போறாங்க!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. "விஷ் பாக்ஸ்" என இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் இருக்கும் கார் வாங்குவதில் உள்ள சிக்கல்களை இந்த திட்டத்தின் மூலம் குறைத்து, புதிய வாடிக்கையாளர்களும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக இந்த திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்த கார்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். இந்த காரை வாங்க வேண்டும் என்றால் நம்மிடத்தில் அதிகமான பணம் தேவைப்படும். இந்நிலையில் பல வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும், அதை வாங்குவதற்கு அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

mercedes-benz wishbox

இந்த சிக்கல்களை குறைப்பதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் "விஷ் பாக்ஸ்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் சொகுசு கார்களை பல்வேறு விதமான ஆப்ஷன்களின் மூலம் மிகக் குறைவான பணத்தை செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இப்படியாக மூன்று புதிய திட்டங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி முதல் திட்டமாக "ஸ்டெப் அப்" இஎம்ஐ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்குபவர்கள் முதலில் அதிகத் தொகையை இஎம்ஐயாக செலுத்த தேவையில்லை. தொடர்ந்து இவர்கள் காரை பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போது அடுத்தடுத்த மாதங்களில் இவர்கள் செலுத்தும் இஎம்ஐ தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

mercedes-benz wishbox

இதனால் காரை வாங்கிய புதிதில் இவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியது இருக்காது. கார் வாங்கியவுடன் அதிக இஎம்ஐ செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காரை வாங்கிய பிறகு வாடிக்கையாளர்கள் குறைவான இஎம்ஐ செலுத்தி தொடர்ந்து காரை பயன்படுத்த பயன்படுத்த அதிக பணத்தை இஎம்ஐ செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

இரண்டாவது திட்டமாக "ஈசி ஆனுவல் பெனிஃபிட்" என்ற திட்டம் இருக்கிறது. இந்த காரை வாங்கும் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் பணத்தை இந்த காருக்கான கடனுக்கு செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

mercedes-benz wishbox

இதன்படி அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையோ, இருமுறையோ மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ள வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் மாதம் மாதம் செலுத்த வேண்டிய இஎம்ஐ கட்டணம் குறையும், அல்லது இஎம்ஐ செலுத்த வேண்டிய காலம் குறையும். இதனால் அவர்கள் விரைவாக காரை சொந்தமாகி கொள்ள முடியும்.

மூன்றாவது திட்டமாக "இஎம்ஐ ஹாலிடே" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதல் மூன்று மாதத்திற்கு எந்த விதமான இஎம்ஐ செலுத்த தேவையில்லை. இந்த முதல் மூன்று மாதத்திற்கு பிறகு நான்காவது மாதத்தில் இருந்து அவர்கள் இஎம்ஐ செலுத்தினால் போதும் என இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இருக்கும் செலவே முதல் மூன்று மாதத்தில் செய்து கொண்டு அதன் பிறகு இஎம்ஐ செலுத்தலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காரை வாங்குபவர்களுக்கு ஸ்டார் அஜிலிட்டி ப்ளஸ் என்ற திட்டமும் இருக்கிறது. இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் வாங்குவதன் மூலம் சர்வீஸ் திட்டங்கள், காரை திரும்ப பெறும்போது கிடைக்கும் பணத்திற்கான கேரண்டி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் கார் வாங்கிய பிறகு ஆகும் செலவை 40% வரை குறைக்க முடியும்.

ஸ்டார் அஜிலிட்டி பிளஸ் திட்டத்தை வாங்கினால் இலவசமான சர்வீஸ் மற்றும் காரை திரும்ப விற்க்கும் போது கட்டாயமாக திரும்ப கிடைக்கும் தொகை உள்ளிட்டவை உறுதியாக இருக்கும். மேலும் காரில் ஏதாவது பிரச்சினை வந்தாலும், அதை மாற்றுவதற்கான வாரண்டியும் நீட்டிக்கப்பட்ட வாரண்டியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் காரை விற்பனை செய்து விட்டு புதிய காரை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பு அமையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பென்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஏற்கனவே தங்கள் பயன்படுத்தி வரும் கார்களை விற்பனை செய்து விட்டு புதிய கார்களை வாங்குவார்கள். இது போக புதிய வாடிக்கையாளர்களை இருப்பதன் மூலம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் பேஸ் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 17, 2024, 23:42 [IST]
English summary
Mercedes benz wishbox easier buy luxury cars india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X