மார்க்கெட்டை புரட்டி போட போகும் மெர்சிடிஸ் எலக்ட்ரிக் கார்! விலையை தெரிஞ்சிக்க தான் எல்லாரும் வெயிட்டிங்!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புதிய மேபக் இ.க்யூ.எஸ் (EQS) எலக்ட்ரிக் காரை நாளை (செப்டம்பர் 5) விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இது விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே சில மெர்சிடிஸ்-பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்கும் நிலையில், அவற்றுள் ஒன்றாக இக்யூஎஸ் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய எலக்ட்ரிக் பென்ஸ் காரை பற்றிய விபரங்களையும், இந்த காரின் விலையை எந்த அளவில் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளில் கடந்த சில வருடங்களாகவே ஈடுப்பட்டு வருகிறது. அந்த முயற்சியில் வெளிவந்ததே மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ் எலக்ட்ரிக் கார் ஆகும். பென்ஸ் கார்களை காட்டிலும், மேபக் கார்கள் இன்னும் லக்சரி தரத்திலானவை ஆகும். அந்த வகையில், புதிய மேபக் இக்யூஎஸ் எலக்ட்ரிக் கார் ஆனது விலையுயர்ந்த காராக விளங்குகிறது.

இந்தியாவில் மேபக் இக்யூஎஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.3.5 கோடியில் இருந்து ரூ.4.2 கோடி வரையில் எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக இக்யூஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மேபக் ஜிஎல்எஸ் காரின் விலையை காட்டிலும் புதிய இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரின் விலையை ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சம் அளவில் அதிகமாக எதிர்பார்க்கலாம்.
சில வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ் காரில் 122kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 611கிமீ தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. 122kWh பேட்டரியின் பவரை காரில் உள்ள ட்யூயல் மோட்டார்கள் பெறுகின்றன. இந்த மோட்டார்களில் இருந்து அதிகப்பட்சமாக 649 பிஎச்பி மற்றும் 950 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

மோட்டாரின் ஆற்றல் ஆனது புதிய இக்யூஎஸ் காரின் 4 சக்கரங்களுக்கும் செல்கிறது. ஈக்கோ, ஸ்போர்ட், ஆஃப்ரோடு, இண்டிவிடியூவல் மற்றும் பிரத்யேகமான மேபக் என்கிற டிரைவிங் மோட்களை கொண்ட இந்த எலக்ட்ரிக் காரில் இருந்து தேவைப்பட்டால் சார்ஜை மற்ற சாதனங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றுடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இது, பெடில் ஷிஃப்டர்கள் மூலமாக செயல்படுகிறது.
இக்யூஎஸ் காரில் 0இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதிய மெர்சிடிஸ் இக்யூஎஸ் காரில் வழங்கப்பட முக்கியமான அம்சம் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏர்பேக் ஆகும். இந்தியாவில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏர்பேக் உடன் விற்பனை செய்யப்பட உள்ள முதல் எலக்ட்ரிக் கார் இக்யூஎஸ் ஆகும்.

காருக்குள் 15-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், கேபினை சுற்றிலும் விளக்குகள், பிளஷ் நப்பா லெதர் இருக்கைகள், பின் இருக்கையில் இருந்துக் கொண்டே இன்ஃபோடெயின்மெண்ட் திரையை கண்ட்ரோல் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்கு, மல்டிபிள் ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு சிறப்பான தேவை உள்ளது. விலையுயர்ந்த கார்களையும் எலக்ட்ரிக்கில் வாங்குவதற்கு நிறைய பேர் விரும்புகின்றனர். இதனை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே நன்றாக பயன்படுத்தி வரும் நிலையில், மேலும் ஒரு எலக்ட்ரிக் காராக மேபக் இக்யூஎஸ் ஆனது செப்டம்பர் 5ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications









