சொகுசு பங்களாவே தோத்துப்போகும் காரை அறிமுகப்படுத்திய மெர்சிடீஸ் பென்ஸ்! விலை என்ன தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மேபேக் காரின் முதல் எலக்ட்ரிக் காராக இக்யூஎஸ் 680 என்ற எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 2.25 கோடி என்ற விலையில் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் அதிக விலை கொண்ட கார்களில் இந்த கார் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமான மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் மேபேக் என்ற எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காராக அந்நிறுவனம் தற்போது மேபேக் இக்யூஎஸ் 680 என்ற எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் பல்வேறு புதிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ரூபாய் 2.25 கோடி என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

mercedes-maybach eqs 680 launch

மெர்சிடிஸ் இக்யூஎஸ் 680 காரை பொருத்தவரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒரு மாஸ்டர் பீஸ் கார் என்று சொல்லலாம். இந்த காரின் வடிவமைப்பு அந் நிறுவனத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சொகுசு வசதி மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த காரின் விலை அதிகமாக இருக்கிறது. பணக்காரர்களை இந்த காரை வாங்க தயக்கம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பணக்காரர்கள் வேண்டுமானால் இந்த காரை வாங்கலாம். அதிகமான விலைக்கு முக்கியமான காரணம் இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எத்தனை கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யப் போகிறது என்ற தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் அந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கான பல்வேறு யுத்திகளை செய்து வருகிறது. ஏற்கனவே அந்நிறுவனம் 5 எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது இந்த 2024ம் ஆண்டு இறுதிக்குள் மற்றொரு புதிய எலெக்ட்ரிக் காரையும் இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருவதற்காக முடிவு செய்துள்ளது.

மெர்சிடிஸ் மேபேக் தான் எலெக்ட்ரிக் கார்களிலேயே அதிக விலை கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேபேக் மாடலிலேயே எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் கார் இது தான். இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? காரின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது? என்ற விரிவான தகவல்களை அடுத்தடுத்து காண்போம்.

மெர்சிடீஸ் நிறுவனம் மேபேக் காரில் என்னென்ன அம்சங்களை எல்லாம் வழங்குமோ அந்த அம்சங்களை எல்லாம் இந்த காரிலும் வழங்கி உள்ளது. மெர்சிடிஸ் எலெக்ட்ரிக் மாடல் காரின் டிசைன் மொழியின் அடிப்படையிலேயே இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பக்கம் பிளாக் பேனல் ரேடியேட்டர் கிரில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் ஏர்இன்லெட் பகுதியிலும் டி பில்லர் அருகே உள்ள பகுதிகளும் மேபேக் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 21 இன்ச் கொண்ட மேபேக் மல்டிஸ்போக் லைட் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மெர்சிடீஸ் நிறுவனத்தின் லோகோ இடம்பெறவில்லை. ஏனென்றால் இந்த கார் முழுவதுமாக மேபேக் லோகோ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இந்த லோகோ தான் பல்வேறு விதமான வடிவமைப்புகளில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புற கட்டமைப்பை பொறுத்தவரை ஒரு தனியார் ஜெட் விமானம் போல இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் இரண்டு தனித்தனி சீட்டுகள் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளன. சாதாரணமாக மூன்று சீட்டு ஆப்ஷன் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதை பல்வேறு விதமான ஆங்கிள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதை முழுவதுமாக சாய்த்து படித்துக் கொண்டு பயணிக்கும் வகையிலும் இதை பயன்படுத்த முடியும்.

இந்த காரில் இரண்டு விதமான டேபிள் ஆப்ஷன்கள் உள்ளன. லெதர் ஃபினிஷ் கொண்ட இந்த டேபிள்கள் காருக்குள் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே பிசினஸ் மீட்டிங் நடத்துவதற்கு ஏதுவான வசதி கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்ட சீட்டுகளில் மசாஜ் செய்யும் அம்சங்களும் உள்ளன. பத்து விதமான மசாஜ் ஆப்ஷன்கள் உள்ளன. இது முன்பக்க சீட்டில் இருக்கிறது. பின்பக்க பயணிகள் சீட்டில் அமைப்பவர்களுக்கு காப் மசாஜர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள எந்த ஆப்ஷனையும் நீங்கள் தொட்டு தான் ஆப்ரேட் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதில் கெஸ்ட்டர் மூலம் இயங்கும் வகையில் பல்வேறு விதமான அம்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த காரில் ஆம்பியண்ட் லைட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ரோஸ் கோல்டு மற்றும் அமெதிஸ்ட் ஆகிய தீமைகளில் வழங்கப்பட்ட லைட்களாக இருக்கின்றன.

இந்த காரில் மொத்தம் 15 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 4டி சரவுண்ட் சிஸ்டம், டால்பி அட்மாஸ் சிஸ்டத்துடன் 790 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக காருக்குள் சிறிய பிரிட்ஜ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது ஆர்ம் ரெஸ்ட் பகுதிக்கு கீழாக இருக்கிறது. இது 10 லிட்டர் கொள்ளளவு உடன் டெம்பரேச்சர் கண்ட்ரோல் செய்யக்கூடிய ஆப்ஷனல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தவரை ஓஎல்இடி ஹைபர் ஸ்கிரீன் சிஸ்டத்துடன் பக்க என்டர்டைன்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள இரண்டு பயணிகளுக்கும் தனித்தனியான ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் எந்த சீட்டில் இருந்து வேண்டுமானாலும் சுலபமாக ஆப்ரேட் செய்து கொள்ள முடியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள பின்பக்க சீட்டு அருகே உள்ள ஜன்னல் கண்ணாடிக்கும், பின்பக்கம் உள்ள கண்ணாடிக்கும் எலெக்ட்ரானிக் சன் பிளைன்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரகசியமாக தகவலை கொண்டு செல்லும்போது இதை மூடிக்கொள்ள முடியும். இதுபோக இந்த காரில் வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேட் செய்யப்பட்ட சைடு டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு விதமான கஸ்டமைஸ்டு ஆப்ஷன்கள் இருக்கிறது.

இந்த காரில் 122 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 611 கிலோமீட்டர் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் இரண்டு மோட்டார்கள் உள்ளன. இதனால் ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதன் மூலம் இந்த கார் 658பிஎச்பி பவரையும், 950என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பிக்கப்பை பொறுத்தவரை 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறனை கொண்டதாக இருக்கிறது. கிட்டத்தட்ட 3000 கிலோ எடை கொண்ட இந்த கார் சாலையில் பயணிக்கும் போது அதிக ரேஞ்ச் தருவது பெரும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

இந்த காரில் உள்ள பின்பக்க வீலை பார்க்கிங் செய்வதற்காகவோ அல்லது திருப்புவதற்காகவோ 2.5 முதல் 10 டிகிரி வரை திருப்பிக் கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க வீல் திருப்பும் டிகிரி என்பது வேகத்தை பொறுத்து மாறுபடும். மேலும் இந்த காரில் ஏர்மேட்டிக் சஸ்பென்ஷன் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் விலை ரூபாய் 2.25 கோடி என்பதால் வெகு சிலர் மட்டுமே இந்த காரை வாங்க வாய்ப்பு இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த காரை வாங்கலாம். அதுவும் அவர்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே, இந்த காரை வாங்குவார்கள். இதனால் இந்த காரை இந்திய சாலையில் பார்ப்பது மிக அரிதான விஷயமாக இருக்கும். யார் இந்த காரை வாங்கப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 14:49 [IST]
English summary
Mercedes maybach eqs 680 launch india price specs features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+