இந்த காரோட அழகுல மயங்காதவங்களே இருக்க முடியாது! நீ-நான்னு பணக்காரர்கள் இத போட்டி போட்டு வாங்க போறாங்க!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), மேபேக் (Maybach) பிராண்டின்கீழ் ஓர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் (Mercedes-Maybach EQS) இந்த பெயரிலேயே அந்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் மேபேக் பிராண்டின்கீழ் விற்பனைக்குக் களமிறக்கப்படும் முதல் லக்சூரி அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். அதிக ஆடம்பர அம்சங்களுக்கு பெயர்போனதவே மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் ஆகும்.

ஆனால், இந்த மெர்சிடிஸ் மேபேக் கூடுதல் அதிகமான லக்சூரி அம்சங்களைத் தாங்கியிருக்கும். அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த பிராண்ட் கார்கள் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி மின்சார கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதுபற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Mercedes maybach eqs suv

மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி காரின் டிசைன் எப்படி இருக்கு? மெர்சிடிஸ் மேபேக் தயாரிப்புகளில் கவர்ச்சியான தோற்றத்திற்கு கொஞ்சம்கூட பஞ்சம் இருக்காது. இதற்கு சான்றாகவே இந்த எலெக்ட்ரிக் காரும் காட்சியளிக்கின்றது. இதன் கிரில், பம்பர், ஏர் இன்டேக் துளை, எல்இடி டிஆர்எல், ஹெட்லைட், வீல், பான்னெட் என அனைத்தும் தனித்துவமான லுக்கிலேயே உள்ளன.

மேலும், இவையே அக்காருக்கு மிக மிக அழகான லுக்கை வழங்கும் வகையில் இருக்கின்றன. இதன் அழகு முதல் பார்வையிலேயே கவரும் வகையில் இருக்கின்றது. மேலும், இந்த கார் அதிக ஆடம்பரமானதாக இருக்கும் என்பதற்கு சான்றாக அதன் வெளிப்பக்கமே இருக்கின்றது. தொடர்ந்து, இக்காரின் கவர்ச்சிக்கு கூடுதல் பிளஸ்ஸாக டூயன் டோன் அலங்கரிப்பு இருக்கின்றது.

இவை அனைத்தையும் விட ஹைலைட்டாக உலோகத்தாலான பென்ஸ்-இன் முக்கொம்பு எம்பளம் பான்னெட் மேல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அக்காருக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. மேலும், மேபேக் எனும் எழுத்துக்கள் அடங்கிய குரோம் பட்டை ஒன்று கிரில் மற்றும் பான்னெட்டும் இணையக் கூடிய இடத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பக்கமும் மிக அழகானதாகவும், சொகுசானதாகவும் காட்சியளிக்கின்றது. இதற்கு சான்றாக இந்த காரில் மூன்று திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பின்னிருக்கையாளர்களுக்கான திரையும் இரண்டு வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இது 11.6 அங்குலம் அளவுக் கொண்ட திரை ஆகும்.

எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் அதன் திறன்பாடு பற்றிய விபரங்கள்: இந்தியாவில் மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவியில் ஒரே ஒரு ட்ரிம் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. 680 ட்ரிம்-தான் அது. இது ஓர் டூயல்-மோட்டார் செட்-அப் கொண்ட ட்ரிம் ஆகும். 658 எச்பி மற்றும் 950 என்எம் டார்க்கை இது வெளியேற்றும்.

மேலும், இது ஓர் 4 வீல்களும் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரும் கூட. இந்த திறனை 4 மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வாயிலாகவே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க, வெறும் 4.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இது எட்டிவிடும்.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் திறன் பற்றிய விபரம்: மெர்சிடிஸ் மேபேக் இந்த காரில் 122 kWh பேட்டரி பேக்கையே பயன்படுத்தி இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 611 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரி பேக்கை 200 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாகவும் சார்ஜ் செய்ய முடியும்

இதை பயன்படுத்தும் பட்சத்தில் வெறும் 31 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும். இதுமட்டுமில்லைங்க வெறும் 20 நிமிடம் சார்ஜ் செய்தாலே 300 கிமீ ரேஞ்சை இதில் பெற்றுக் கொள்ள முடியும் என மெர்சிடிஸ் தெரிவித்திருக்கின்றது.

சிறப்பான காருக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கலாம்: மெர்சிடிஸ் மேபேக் இந்த காருக்கு இரண்டு விதமான கஸ்டமைசேஷன் ஆப்ஷனை வழங்குகின்றது. சாஃபர் பேக்கேஜ் (Chauffeur Package) மற்றும் ஃபர்ஸ் கிளாஸ் ரியர் பேக்கேஜ் (First-Class Rear Package) ஆகியவையே மேபேக் இக்யூஎஸ் வழங்கப்படுகின்றது.

இதில் முதல் பேக்கேஜ் வாயிலாக பின்னிருக்கையாளர்களுக்கு அதிக சொகுசான பயண அனுபவத்தை சேர்க்கக் கூடிய அம்சங்களைச் சேர்க்க முடியும். இரண்டாவது பேக்கேஜ் வாயிலாக தெர்மல் கோப்பை தாங்கி, யுஎஸ்பி சி போர்ட், எச்டிஎம்ஐ, ஃபோல்டிங் வசதிக் கொண்ட டேபிள்கள், கூலிங் கம்பார்ட்மெண்ட் மற்றும் சில்வர் பிளேட்டட் சேம்பைன் கோப்ளட்டுகள் ஆகியவையே இதில் வழங்கப்படுகின்றது.

விலை விபரம்: மெர்சிடிஸ் மேபேக் இந்த இக்யூஎஸ் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காருக்கு அறிமுக விலையாக ரூ. 2.25 கோடியை நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இதுவே இந்தியாவின் இரண்டாவது மிக அதிகம் விலைக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். முதல் இடத்தில் லோட்டஸ் எலட்ரே மாடலே உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே மெர்சிடிஸ் பென்ஸ், தன்னுடைய கூடுதல் லக்சூரி அம்சங்கள் நிறைந்த மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி-யை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இதற்கும் எலெக்ட்ரிக் கார் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 23:31 [IST]
English summary
Mercedes maybach eqs suv launched in india here is top things to know
மேலும்... #mercedes benz #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+